போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?
Poco C85 5G Smartphone Launched In India | போக்கோ நிறுவனம் தனது புதிய போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
போக்கோ சி85 5ஜி
- இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றுதான் போக்கோ (Poco). இந்த நிறுவனம் தற்போது தனது போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போனை (Poco C85 5G Smartphone) அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
- இந்த போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போனில் 6.9 இன்ச் HD+LCD டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6300 சிப்செட் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 50 மெகா பிக்சல் ரியர் கேமராவை கொண்டுள்ளது. இதில் 8 மெகா பிக்சல் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போனில் 6,000 mAh சிலிக்கான் கார்பன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 33 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சம் உள்ளது. இதில் 10 வாட்ஸ் வரை ரிவர்ஸ் சார்ஜிங் செய்துக்கொள்ள முடியும்.
- 4ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட இந்த போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் ரூ.11,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.12,999-க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.14,499-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.1,000 வரை வங்கி சலுகைகளை பெற முடியும். இந்த போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கான ப்ரீ புக்கிங் தான் தற்போது திறக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 16, 2025 முதல் இந்த போக்கோ சி85 5ஜி ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.




