கூகுள் மேப்ஸில் இருக்கும் வண்ண கோடுகளுக்கு இதுதான் அர்த்தம்!
Google Maps Colored Lines and Its Meanings | கூகுள் மேப்ஸ் செயலியில் பல வகையான வண்ண நிறங்களில் கோடுகள் இருக்கும். சிவப்பு, மஞ்சள், பச்சை என இருக்கும் அந்த கோடுகளுக்கான அர்த்தங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் கூகுள் மேப்ஸ் (Google Maps) பயன்படுத்தாத நபர்கள் இருக்கவே மாட்டார்கள். காரணம், மும்பெல்லாம் ஏதேனும் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் ஓட்டுநர்கள் அல்லது சாலையில் செல்லும் நபர்களிடம் முகவரி கேட்பார்கள். ஆனால், இப்போது அதற்கான தேவையே இல்லை. எந்த இடத்திற்கு செல்ல வேண்டுமோ அந்த முகவரியை பதிவிட்டால், கூகுள் மேப்ஸ் நம்மை அங்கு கொண்டு சேர்த்துவிடும். இது ஒரு ஊருக்கு புதியதாக வரும் நபர், தெரியாத இடங்களுக்கு செல்லும் நபர்கள் மற்றும் புதிய கடைகள், மற்றும் உணவகங்கள் என எங்கு சென்றாலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அன்றாட தேவைகளில் ஒன்றாக கூகுள் மேப்ஸ் மாறிவிட்ட நிலையில், அதில் இருக்கும் வண்ண கோடுகளுக்கான அர்த்தங்கள் என்ன என்று கூட பலர் தெரியாமல் உள்ளனர். இந்த நிலையில், கூகுள் மேப்பில் இருக்கும் வண்ண கோடுகளுக்கான அர்த்தங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கூகுள் மேப்ஸில் இருக்கும் வண்ண கோடுகள் – அர்த்தம் என்ன?
கூகுள் மேப்ஸில் பச்சை, மஞ்சல், சிவப்பு உள்ளிட்ட நிறங்களில் கோடுகள் தோன்றும். அதற்கான அர்த்தங்கள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
பச்சை நிற கோடுகள்
பச்சை நிற கோடுகள் நீங்கள் செல்லும் பாதையில் எந்த விதமான போக்குவரத்து நெரிசல்களும் இல்லாமல் சுலபமானதாக உள்ளது என்பதை விளக்குகிறது. அந்த பாதையில் நீங்கள் செல்லும் பட்சத்தில் உரிய நேரத்தில் உங்களால் நீங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியும்.




இதையும் படிங்க : எலான் மஸ்கின் எக்ஸ் தளத்திற்கு ரூ.1,259 கோடி அபராதம்.. ஐரோப்பிய ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை!
மஞ்சல் அல்லது ஆரஞ்சு நிற கோடுகள்
மஞ்சல் மற்றும் ஆரஞ்சு நிற கோடுகள் சாலையில் சிறிது அளவு போக்குவரத்து நெறிசல் உள்ளது என்பதை விளக்குகிறது. வாகனங்கள் மெதுவாக நகர்ந்து செல்கின்றன. ஆனால், அவை ஒரே இடத்தில் நிற்கவில்லை என்பதை உணர்த்துகிறது.
சிவப்பு நிற கோடுகள்
சிவப்பு நிற கோடுகள் நீங்கள் செல்லும் பாதை மிக கடுமையான போக்குவரத்து நெரிசலை கொண்டுள்ளது என்றும், அந்த வழியாக நீங்கள் பயணம் செய்யும் பட்சத்தில் உங்களால் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் தாமதம் ஏற்படலாம் என்பதை அது உணர்த்துகிறது.
இதையும் படிங்க : இனி யாருக்கும் தெரியாமல் வாட்ஸ்அப் குழுவில் இருந்து வெளியேறலாம்.. வந்தது புதிய அம்சம்!
நீல நிற கோடுகள்
நீல நிற கோடுகள் உங்கள் பயனத்திற்கான கோடுகள். நீங்கள் செல்லும் வழியில் பல சாலைகள் இருக்கும் நிலையில், நீங்கள் செல்ல வேண்டிய சாலையை அது நீல நிறத்தில் காட்டும்.