Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Redmi Note 15 5G : அசத்தல் அம்சங்களுடன் அறிமுகமான ரெட்மி நோட் 15 5ஜி.. அதுவும் பட்ஜெட் விலையில்!

Redmi Note 15 5G Launched In India | ரெட்மி நிறுவனம் தனது ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Jan 2026 12:26 PM IST
ரெட்மி நிறுவனம் தொடர்ந்து தனது புதிய மாடல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், நேற்று (ஜனவரி 06, 2026) தனது புதிய மாடல் ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். 

1 / 5
இந்த ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனில் 6.77 இன்ச் AMOLED டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 3 சிப்செட் பிராசசர் அம்சத்தை கொண்டுள்ளது. இதில் 8 ஜிபி LPDDR4X RAM மற்றும் 256 ஜிபி UFS 2.2 வரை ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி மைக்ரோ எஸ்டி ஸ்டோரேஜ் வசதியும் இதில் உள்ளது.

2 / 5
இந்த ஸ்மார்ட்போன் 18 மெகாபிக்சல் மெயின் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கில் கேமரா என டூயல் கேமரா அம்சத்தை கொண்டுள்ளது. அதுமட்டுமன்றி செல்ஃபி மற்றும் வீடியோ கால் செய்வதற்கு சிறந்த வகையில் 20 மெகாபிக்சல் முன்பக்க கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 

3 / 5
8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.19,999 ஆக உள்ளது. இதுவே 8ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 15 5ஜி ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.21,999 ஆக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.3,000 வரை வங்கி தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

4 / 5
ஆக்சிஸ், ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ ஆகிய வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் நபர்களுக்கு ரூ.3,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் இரண்டு மாதங்களுக்கான யூடியூப் பிரீமியம், மூன்று மாதங்களுக்கான ஸ்பாட்டிஃபை பிரீமியம் மற்றும் 6 மாதங்களுக்கான கூகுள் ஒன் ஆகிய அம்சங்கள் வழங்கப்படுகின்றன. 

5 / 5