AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பங்குனி தேய்பிறை பிரதோஷம் 2026.. வழிபாட்டு முறைகளும், சிறப்புகளும்..

Panguni Pradhosham 2026: கோவிலில் சொல்லப்படும் சிவ மந்திரங்களைக் காதால் கேட்டாலே கர்ம வினைகள் நீங்கும். பங்குனி மாத பிரதோஷ வேளையில் மனதார சிவனை நினைத்து விரதமிருப்பது நம் வாழ்வில் உள்ள தடைகளை நீக்கி, சகல சம்பத்துகளையும் பெற்றுத் தரும் என்பது ஐதீகம்.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 16 Mar 2026 13:39 PM IST
ஆன்மீக ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதங்களில் ஒன்று பங்குனி மாதம். இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே வரும் தேய்பிறை பிரதோஷம் மகா புண்ணிய பலன்களைத் தரக்கூடியது. சிவபெருமானை வழிபடுவதற்கு உகந்த 'அஷ்ட விரதங்களில்' மிக முக்கியமானது பிரதோஷ விரதமாகும்.

1 / 5
பிரதோஷத்தின் மகிமை: பிரதோஷ காலம் என்பது தேவர்கள் சிவபெருமானை வழிபட்ட நேரமாகும். இந்த நேரத்தில் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையே சிவபெருமான் காட்சி தருவதாக ஐதீகம். ஒரு வருடத்தில் வரும் அனைத்து பிரதோஷங்களிலும் விரதமிருந்து சிவனை வழிபடுபவர்களுக்கு சிவலோகத்தில் இடம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

2 / 5
பங்குனி பிரதோஷத்தின் தனிச்சிறப்பு: பங்குனி மாதம் தெய்வங்கள் சிவபெருமானை வழிபட்டு வரம் பெற்ற மாதமாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் பிரதோஷ வழிபாட்டினால் கிரக தோஷங்கள் நீங்கி, பஞ்சமா பாதகங்கள் விலகும். குறிப்பாக, துவாதசி திதியுடன் திரியோதசி சேரும் நாளில் சிவனையும் நந்தியையும் தரிசித்தால் முன்ஜென்ம பாவங்கள் விலகும்.

3 / 5
வழிபாட்டு முறைகள்: மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான பிரதோஷ வேளையில் சிவாலயத்திற்குச் சென்று வழிபட வேண்டும். நந்தி மற்றும் சிவபெருமானின் அபிஷேகத்திற்குத் தேவையான பால், தயிர், பன்னீர், இளநீர், தேன் மற்றும் அரிசி மாவு போன்ற பொருட்களை வாங்கித் தருவது சிறந்தது. நந்திக்கு அருகம்புல் மாலையும், சிவபெருமானுக்குத் தும்பைப்பூ மாலையும் சாற்றி வழிபடுவது சகல தோஷங்களையும் நீக்கும்.

4 / 5
நவகிரக சன்னதியில் உள்ள சந்திர பகவானுக்கு மல்லிகைப் பூக்கள் சாற்றி, தயிர் சாதம் நெய்வேத்தியம் செய்து வழிபட வேண்டும். இது மனக்கவலைகளை நீக்கி மனோபலத்தைத் தரும். நீண்ட நாட்களாகத் தடைபட்டுக் கொண்டிருந்த திருமண காரியங்கள் கைகூடும். சனிக்கிழமை மட்டுமல்லாது மற்ற நாட்களில் வரும் பிரதோஷ வழிபாடும் சனி பகவானால் ஏற்படும் தொல்லைகளைக் குறைக்கும். பிரதோஷத்தன்று சிவாலயங்களில் தீபங்கள் ஏற்றி வழிபடுவதன் மூலம் சொந்த வீடு அமையும் யோகம் உண்டாகும்.

5 / 5
Follow Us