வணிக சிலிண்டர் விலை உயர்வு – சாலையோர உணவகங்களுக்கு கடும் பாதிப்பு?
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக மே 1, 2026 அன்று 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ரூ.933 விலை உயர்வை சந்தித்துள்ளது. இதனால் சாலையோர உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேற்கு ஆசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் மே 1, 2026 அன்று 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ரூ.933 விலை உயர்வை சந்தித்துள்ளது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் ரூ. 2, 246க்கு விற்கப்பட்ட நிலையில், மே 1, 2026 இன்று மேலும் ரூ. 9333 உயர்த்தப்பட்டு ரூ.3,237க்கு விற்பனை செய்யப்படுகிறது. போர் பதற்றம் காரணமாக ஹார்முஸ் நீணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் எரிபொருள் விலை உயர்ந்து வருகிறது.
சாலையோர உணவகங்களுக்கு கடும் பாதிப்பு?
இது பெரிய ரெஸ்டாரண்ட்கள் முதல் சிறு குறு மற்றும் சாலையோர உணவகங்கள் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். குறிப்பாக சாலையோர உணவகங்கள் இந்த திடீர் விலை ஏற்றத்தால் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை போன்ற பெரு நகரங்களில் தங்கி படிக்கும் மற்றும் வேலைபார்க்கும் இளைஞர்கள் பலரும் சாலையோர உணவகங்களை நம்பியே இருக்கின்றனர். தற்போது கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் உணவுகளின் விலையும் உயரும் சூழல் இருப்பதால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : புதிய கேஸ் இணைப்பு வழங்குவது நிறுத்தம்.. பொதுமக்களுக்கு ஷாக் நியூஸ்!




தமிழ்நாட்டில் இதுவரை உணவகங்களில் விலையேற்றம் செய்யப்படவில்லை என்றாலும் ஹைதராபாத் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் விலைகள் ஏற்றப்பட்டுள்ளன. இதனால் அங்கு பணி புரியும் ஐடி ஊழியர்கள் மாணவர்கள், தினக் கூலி பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுவர் என கூறப்படுகிறது. ஏற்கனவே வணிக சிலிண்டர்களுக்கு கட்டுப்பாடுகள் நிலவி வரும் நிலையில் பல உணவகங்கள் பிளாக் மார்க்கெட்டில் சிலிண்டர்களை 2 மடங்கு அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.
இதையும் படிக்க : கேஸ் சிலிண்டர் முன்பதிவில் அமலுக்கு வரும் மாற்றம்?.. வெளியான முக்கிய தகவல்!
இதனால் உணவுகளின் விலையும் கடந்த மார்ச் மாதத்தில் கடுமையாக அதிகரரிக்கப்பட்டது. தற்போது மீண்டும் விலை உயர்த்த வேண்டிய சூழலுக்கு ஹோட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனையடுத்து சிலர் ஆட்குறைப்பு செய்ய முடிவெடுத்துள்ள வேளையில், கடைகளை மூட வேண்டும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கடைகளை நம்பியுள்ள மக்களின் எதிர்காலமும் பாதிக்கப்படா வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.