வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. ரூ.3,237-க்கு விற்பனை!
Commercial Gas Cylinder Price Increased | சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், சென்னையில் தற்போதுள்ள வீட்டு உபயோக மற்றும் வணிக கேஸ் சிலிண்டர்களுக்கான விலை நிலவரம் குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
சென்னை, மே 01 : ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையை மாற்றி அமைக்கும் நிலையில், கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வவகையில் மே 01, 2026 ஆன இன்று சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் (Commercial Gas Cylinder Price) விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஏற்கனவே மேற்கு ஆசிய போர் காரணமாக கேஸ் சிலிண்டர்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு
மேற்கு ஆசியா போர் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கேஸ் சிலிண்டர்கள் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், தற்போது வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ரூ.933 விலை உயர்வை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : மே மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுமா?.. இத தெரிஞ்சுக்கோங்க!
ரூ.933 உயர்வை சந்தித்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்
முன்னதாக வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் சென்னையில் ரூ.2,246-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.933 உயர்வை சந்தித்து ரூ.3,237-க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் ரூ.3,071-க்கும், கொல்கத்தாவில் ரூ.3,202-க்கும், மும்பையில் ரூ.3,024-க்கும் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விற்பனை செய்யப்படுகிறது.
கேஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?
மேற்கு ஆசியாவில் இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் போர் காரணமாக ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டது. இதன் காரணமாக உலக நாடுகளின் எண்ணெய் கப்பல்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. அந்த வகையில், இந்தியாவின் எண்ணெய் கப்பல்களும் ஹோர்முஸ் நீரிணையில் சிக்கிக்கொண்ட நிலையில், இந்தியாவில் கேஸ் சிலிண்டர்களின் விலை உயர்த்தப்பட்டது.
இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் காத்திருப்பு காலம் 5 நாட்களுக்கும் குறைவாக மாற்றப்பட்டுள்ளது.. முக்கிய அதிகாரி தகவல்!
தற்போது வரை ஹோர்முஸ் நீரிணை சிக்கல் முடிவுக்கு வராத நிலையில், இந்தியாவில் கேஸ் சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்வை சந்தித்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்துள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த வித மாற்றமுமின்றி விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.