AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஆண்ட்ராய்டு போன்களில் Face Unlock முறையில் பாதுகாப்பு குறைபாடு? – பயனர்களுக்கு பெரிய ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

Android Face ID Risk : சமீபத்திய ஆய்வில் இந்த வசதி பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களில் ஃபேஸ் அன்லாக் வசதி பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருப்பதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ் அன்லாக் வசதியை ஒரு போட்டோ மூலம் எளிதாக போனை அன்லாக் செய்ய முடிகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு போன்களில் Face Unlock முறையில் பாதுகாப்பு குறைபாடு? –  பயனர்களுக்கு பெரிய ஆபத்து – ஆய்வில் அதிர்ச்சி தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 01 May 2026 16:32 PM IST

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் Face Unlock வசதி பலருக்கும் எளிதான மற்றும் விரைவான பாதுகாப்பு முறையாக இருக்கிறது. நம்மை தவிர வேறு யாராலும் போனை பயன்படுத்த முடியாது என்ற நம்பிக்கையை தருகிறது. ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்று, இந்த வசதி பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களில் பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருப்பதாகக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆய்வின் படி, ஆண்ட்ராய்டு போன்களில் உள்ள ஃபேஸ் அன்லாக் வசதியை ஒரு சாதாரண புகைப்படத்தின் மூலம் கூட எளிதாக பயன்படுத்தி போனை அன்லாக் செய்ய முடிகிறது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இது பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் மற்றும் தரவுகளுக்கு பெரிய பாதுகாப்பு அபாயமாக மாறுகிறது.

ஆண்ட்ராய்டு போன்களில் Face Unlock முறையில் பாதுகாப்பு குறைபாடு?

சாம்சங், ஒன்பிளஸ், ஷியோமி போன்ற முன்னணி நிறுவனங்களின் சில மாடல்கள் கூட இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஸ்25, ஓப்போ ஃபைன்ட் எக்ஸ்9 புரோ, மோட்ரோலோ ரேசர் 50 போன்ற மாடல்களில் இந்த பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டதில், இந்த ஃபேஸ் அன்லாக் வசதி நம் போட்டோவின் மூலம் ஏமாற்றப்பட முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : இண்டர்நெட் இல்லாமல் யூடியூப் வீடியோ பார்ப்பது எப்படி? விவரம் இதோ

மொத்தம் 133 போன்களில் நடத்தப்பட்ட சோதனையில், பெரும்பாலான போன்கள் 2D முக அடையாள முறையை பயன்படுத்துவதால் இந்த குறைபாடு ஏற்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு போன்களில் Face Unlock பெரும்பாலும் சாஃப்ட்வேர் முறையில் செயல்படுகிறது. அதாவது, கேமரா மூலம் எடுத்த படங்களை வைத்து முகத்தை அடையாளம் காண்கிறது. இதனால், உண்மையான மனிதர் மற்றும் புகைப்படம் ஆகியவற்றை வேறுபடுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது.

இதற்கு மாறாக, ஆப்பிள் ஐ போன்களில் உள்ள Face ID தொழில்நுட்பம் 3D முக அடையாள தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது. இதில் முகத்தின் தோற்றம், அமைப்பு போன்ற பல அம்சங்கள் கணக்கில் எடுக்கப்படுவதால், போனை போட்டோவின் மூலம் அதை ஏமாற்றுவது மிகவும் கடினம். இதுவே ஐபோன்களில் Face ID அதிக பாதுகாப்பானதாக இருக்கக் காரணம் என கூறப்படுகிறது.

இந்த காரணத்தால் தான் பல நிபுணர்கள் மற்றும் பயனர்கள் ஆண்ட்ராய்டு போன்களில் ஃபிங்கர்பிரிண்ட் மூலம் அன்லாக் செய்வதை அதிகம் விரும்புகின்றனர். இது ஃபேஸ் அன்லாக் முறையை விட நம்பகமானதாக கருதப்படுகிறது.

இதையும் படிக்க : சாராண பேட்டரிக்கும் சிலிகான் பேட்டரிக்கும் உள்ள வித்தியாசம்? எது நல்லது?

இந்நிலையில், புதிய ஆண்ட்ராய்டு போன்களில் மேம்பட்ட முக அடையாள தொழில்நுட்பம் அறிமுகமாகி வருகிறது. குறிப்பாக ஹார்வேர்டு மூலம் முக அடையாளம் காணும் முறையை கொண்டு வர கூகுகள் முயற்சி செய்து வருகிறது. இது ஐபோன் பேஸ் ஐடி போன்ற பாதுகாப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முடிவில், ஃபேஸ் அன்லாக் வசதியின் பாதுகாப்பு குறித்து பயனர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முக்கியமான டேட்டாக்கள் உள்ள போன்களில் ஃபிங்கர்பிரிண்ட் அல்லது பின் அல்லது பாஸ்வேர்டு போன்ற பாதுகாப்பு முறைகளை பயன்படுத்துவது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

Follow Us