Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Are You Illegal Entry…கோவையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 வங்கதேசத்தினர்…கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை!

Bangladeshis Arrested: இந்தியாவுக்குள் முறையான ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக நுழைந்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் தங்கி வேலை பார்த்து வந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 11 பேரை கியூ பிரிவு போலீசார் கைது செய்து முகாமில் ஒப்படைத்தனர். மேலும், வங்கதேச தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Are You Illegal Entry…கோவையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 வங்கதேசத்தினர்…கியூ பிரிவு போலீசார் நடவடிக்கை!
கோவையில் வங்கதேசத்தினர் 11 பேரை கைது
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 30 Jan 2026 06:37 AM IST

இந்தியாவில் முறையான அனுமதி இன்றி சட்ட விரோதமாக பணிபுரிவதும், தங்கி இருப்பதும் குற்றமாகும். இது தொடர்பாக கியூபிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த போலீசார் அவ்வப்போது, சோதனையிலும் ஈடுபட்டு வருவது வழக்கமாகும். இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் அருகே உள்ள மணிக்கம்பாளையத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் வெளிநாட்டை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக தங்கி இருந்து பணிபுரிவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், கியூ பிரிவு காவல் ஆய்வாளர் தாமோதரன், அன்னூர் (பொ) காவல் ஆய்வாளர் அம்பிகா ஆகியோர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் அழகேசன், முத்தலீப் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சம்பவத்தன்று நள்ளிரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்து இடம் அளிக்கும் வகையில், வெளிநாட்டை சேர்ந்த 11 பேர் வேலை பார்த்து வந்தது இருந்தது தெரிய வந்தது.

சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேசத்தை சேர்ந்த 11 பேர்

இதைத் தொடர்ந்து, அவர்களிடம் கியூ பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், 11 பேரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதும், இவர்களிடம் இந்தியாவில் தங்கி இருந்து பணி புரிவதற்கு எந்த விதமான ஆவணமும் இல்லாமல் சட்ட விரோதமாக தங்கி இருந்தது தெரிய வந்தது. மேலும், வங்கதேசத்தில் ரூ. 7 ஆயிரம் கொடுத்து சட்ட விரோதமாக தங்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்தனர். மேலும், இந்தியாவில் வேலை வாங்கித் தரும் ஏஜெண்டுகளிடம் கமிஷன் தொகை கொடுத்தால் வேலை கிடைத்து விடுகிறது.

மேலும் படிக்க: நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை? 3 பேர் கதைு – பரபரப்பு சம்பவம்

11 பேரையும் கைது செய்த கியூ பிரிவு போலீசார்

கடந்த சில ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், அங்கிருந்து இந்த நிறுவனத்தில் கடந்த ஒரு மாதமாக வேலை பார்த்து வருகிறோம் என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அந்த 11 பேரையும் கியூ பிரிவு போலீசார் கைது செய்து சேலம் மாவட்டம், ஆத்தூரில் உள்ள தற்காலிக முகாமில் ஒப்படைத்தனர். பின்னர், வங்கதேசத்தினர் 11 பேர் கைது செய்யப்பட்டது குறித்து சென்னையில் உள்ள வெளிநாட்டினருக்கான மண்டல பதிவாளர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவில் சட்டவிரோதமாக தங்குபவருக்கு தண்டனை

மேலும், இந்த அலுவலகத்தில் இருந்து வங்கதேச நாட்டைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டது குறித்து அந்த நாட்டின் தூதரக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கியூ பிரிவு போலீஸ் தெரிவித்தனர். இந்தியாவுக்கு முறையான பாஸ்போர்ட், விசா இன்றி வருவதும், அனுமதிக்கப்பட்ட காலத்தை தாண்டி இந்தியாவில் தங்கி இருப்பதும் சட்ட விரோதமாகும். இதில், சம்பந்தப்பட்ட நபர்பகள் இந்திய குடியுரிமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 2 முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வாய்ப்புள்ளது. இதை தொடர்ந்து, அவர்கள் சொந்த நாடுகளுக்கு கடத்தப்படுவார்கள்.

மேலும் படிக்க: விருதுநகரில் 2 முறை நில அதிர்வு – பீதியில் வீட்டைவிட்டு வெளியேறிய மக்கள்