Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிப்ரவரி 1 அன்று டாஸ்மாக் கடைகள் மூடல் – காரணம் என்ன? ‘டிரை டே’ என்றால் என்ன?

TASMAC shops closed : வருகிற பிப்ரவரி 1, 2026 அன்று தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அன்றைய தினம் தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினத்தை முன்னிட்டு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

பிப்ரவரி 1 அன்று டாஸ்மாக் கடைகள் மூடல் – காரணம் என்ன? ‘டிரை டே’ என்றால் என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 29 Jan 2026 14:42 PM IST

சென்னை, ஜனவரி 29 : தமிழ்நாடு முழுவதும் இயங்கும் அனைத்து டாஸ்மாக் (TASMAC) மதுபான கடைகளும் வரும் பிப்ரவரி 1, 2026 அன்று ஞாயிற்றுக்கிழமை முழுவதுமாக மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில் அதற்கான காரணம் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். வருகிற பிப்ரவரி 1, 2026 அன்று ஞாயிற்றுக்கிழமை தைப்பூசம் (Thai Poosam) மற்றும் வள்ளலார் தினம் கடைப்பிடிக்கப்படுவதால், இதனை முன்னிட்டு மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், டாஸ்மாக் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபான கடைகள், தனியார் பார்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் அன்று இயங்காது. அந்த நாளில் விற்பனை மட்டுமல்லாது மற்ற பணிகள் எதுவும் செயல்படாது என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தத் துறை கட்டுப்பாட்டின் கீழ் டாஸ்மாக் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் 2000க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் மற்றும் பார்கள் மூலம் விற்பனை நடைபெற்று வருகின்றன. மேலும், தினசரி சராசரியாக ரூ.100 கோடிக்கு மேல் வருவாய் டாஸ்மாக் மூலம் ஈட்டப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் வார இறுதி நாட்கள் மற்றும் தீபாவளி, பொங்கல் போன்ற சிறப்பு நாட்களில் இந்த வருவாய் பல மடங்கு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்களில் குறைந்தது ரூ.500 கோடி அளவுக்கு விற்பனை நடைபெறும்.

இதையும் படிக்க : பரந்தூர் விமான நிலையத்தால் சென்னைக்கு மிகப்பெரிய ஆபத்து? ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

டிரை டே என்றால் என்ன?

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் ஆன்மிக மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்த நாட்களில் தமிழக அரசு சார்பில் டிரை டே கடைப்பிடிப்பது வழக்கமாக உள்ளது. அதன்படி, தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினம் போன்ற ஆன்மிக நாட்களில் மது விற்பனை தடை செய்யப்படுகிறது. தைப்பூசம், தமிழ் கடவுளான முருகப்பெருமானை வழிபடும் முக்கிய திருவிழாவாகும். இந்த நாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் முருகன் கோவில்களில் கூடுவர். அதேபோல், சமூக சீர்திருத்தவாதி வள்ளலாரின் நினைவாக அனுசரிக்கப்படும் வள்ளலார் தினமும் ஆன்மிக மற்றும் சமூக முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இந்த இரு தினங்களையும் கருத்தில் கொண்டு சமூக அமைதி மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் அளித்துள்ளது. மதுக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, பெரும்பாலான இடங்களில் மக்கள் முன் கூட்டியே மது வாங்கி இருப்பு வைக்க விரும்புவர் என்பதால் அடுத்த இரண்டு நாட்களில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அரசின் உத்தரவை மீறி, மறைமுகமாக மதுபான விற்பனை மேற்கொள்ளப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தமிழகத்தில் இடைக்கால பட்ஜெட்?..எப்போது தாக்கல் செய்யலாம்…அரசு தீவிர ஆலோசனை!

டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நாட்கள்

ஒவ்வொரு ஆண்டும், தமிழ்நாடு அரசு சில நாட்களை டாஸ்மாக் கடைகளுக்கான ‘ட்ரை டே’ ஆக அறிவித்து வருகிறது. அதன்படி, ஜனவரி 26 – குடியரசு தினம், ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம், அக்டோபர் 2 – காந்தி ஜெயந்தி மற்றும் தைப்பூசம், மகா சிவராத்திரி போன்ற முக்கிய ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த தினங்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற மற்றும் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நாட்கள் போன்ற நாட்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது வழக்கம். மேலும் தேவைப்பட்டால் சட்ட ஒழுங்கு காரணங்களால் சில முக்கிய இடங்களில் மதுபானக் கடைகள் முடப்படுவது வழக்கமாக உள்ளது.