AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பாஜக – அதிமுகவுடன் கூட்டணி?.. “வதந்திகளை நம்ப வேண்டாம்”.. தவெக தடீர் விளக்கம்!!

TVK issues clarification: குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை.

பாஜக – அதிமுகவுடன் கூட்டணி?.. “வதந்திகளை நம்ப வேண்டாம்”.. தவெக தடீர் விளக்கம்!!
கோப்புப் புகைப்படம்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 16 Mar 2026 12:56 PM IST

சென்னை, மார்ச் 16: தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியானதற்கு அக்கட்சியின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை ஏப்.23ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதிப் பங்கீடுகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. குறிப்பாக நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் எந்த கூட்டணியில் இணையப்போகிறது என்பது அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.

இதையும் படிக்க: திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் விசிக, கம்யூனிஸ்டுகள்?.. அண்ணாமலை சொன்ன ஷாக் தகவல்!!

பாஜக – அதிமுகவுடன் ரகசிய பேச்சுவார்த்தை:

அந்தவகையில் தமிழக வெற்றிக் கழகம், பாஜகவுடன் கூட்டணி சேர பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கடந்த சில நாள்களாக பேசப்பட்டு வருகிறது. சமூக ஊடகங்களிலும் இதுதொடர்பாக பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதோடு, விஜய்க்கு துணை முதல்வர் பதவி வழங்க பாஜக- அதிமுக கூட்டணி முன்வந்துள்ளதாகவும், 80க்கும் மேற்பட்ட தொகுதிகளை வழங்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது. அதோடு, நேற்றைய தினம் (மார்ச் 15) சிபிஐ விசாரணைக்கு டெல்லி சென்ற விஜய், அங்கு அமித்ஷாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் கூறப்பட்டது.

தவெக திட்டவட்டமாக மறுப்பு:

ஆனால், தவெகவின் இணை பொதுச் செயலாளர், முதன்மை செய்தி தொடர்பாளர் சிடிஆர் நிர்மல் குமார், இந்த தகவல்கள் அனைத்தையும் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பதிவில், சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் வர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்திகூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

எந்தவித பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை:

குறிப்பிட்ட கட்சிகள் மற்றும் அரசியல் தலைவர்களுடன் எந்தவிதமான பேச்சுவார்த்தை, எந்த மட்டத்திலும் நடைபெறவில்லை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம். இதே போன்ற பொய்ச்செய்தி உத்தியை காங்கிரசு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளோடு தொடர்புபடுத்தியும் கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டதும் அது உண்மை இல்லை என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

இதையும் படிக்க: திமுக கூட்டணியில் இருந்து விலக தவாக முடிவு?.. பரபரப்பை கிளப்பிய வேல்முருகன்..

குழப்பத்தை ஏற்படுத்தும் திமுக:

இருப்பினும் பொதுமக்களிடையேயும், தொண்டர்களிடையேயும் தொடந்து குழப்பத்தை விளைவிப்பதற்காகவே இத்தகைய ஆதாரமற்ற செய்திகள் திமுகவினரால் பரப்பப்படுகின்றன. பொறுப்புள்ள ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளப் பயனாளர்கள், செய்தியின் உண்மைத்தன்மையை ஆராயாமல் இத்தகைய வதந்திகளைப் பகிர வேண்டாம்! வாய்மையே வெல்லும்!. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Follow Us