Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“தேர்தல் நெருங்குவதால் போராட்டங்கள் பேஷனாகிவிட்டது”.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு கருத்து

தமிழகத்தில் தொடர்ச்சியாக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தற்காலிக ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், அரசு அதற்கு மும்மரமாக தயாராகி வருகிறது. இந்த சூழலில் ஊழியர்களின் இந்த தொடர் போராட்டம் அரசுக்கு கடுமையான அழுத்தத்தை கொடுத்து வருகிறது.

“தேர்தல் நெருங்குவதால் போராட்டங்கள் பேஷனாகிவிட்டது”.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு கருத்து
மா.சுப்பிரமணியன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 30 Jan 2026 08:06 AM IST

சென்னை, ஜனவரி 30: தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் சங்கத்தினர், இடைநிலை ஆசிரியர்கள், பகுதிநேர ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள், சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அந்த வரிசையில் மருத்துவ துறையில் பணியாற்றும் பல்நோக்கு மருத்துவ பணியாளர்களும் கடந்த 10 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். குறிப்பாக பணி நிரந்தரம், வார விடுமுறை உள்ளிட்டவை அவர்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. இதேபோல், தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற தங்களின் ஒரே கோரிக்கையை வலியுறுத்தித்தி தொடர்ந்து 34வது நாளாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதி எண் 311-ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்.

இதையும் படிக்க : பரந்தூர் விமான நிலையத்தால் சென்னைக்கு மிகப்பெரிய ஆபத்து? ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?

அடுத்தடுத்து தொடரும் போராட்டங்கள்:

இவ்வாறு தொடர்ச்சியாக அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தற்காலிக ஊழியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், ஊழியர்களின் இந்த போராட்டம் அரசுக்கு கடுமையான அழுத்தத்தை கொடுத்து வருகிறது. ஒரு சில துறைகளில் பணி நிரந்தரம் உள்ளிட்டவற்றை திமுக அரசு கடந்த தேர்தலில் வாக்குறுதியாகவே கொடுத்துள்ளது. எனினும், அவற்றை 5 ஆண்டுகள் நிறைவு பெறும் நிலையிலும், அவர்களால் நிறைவேற்ற முடியவில்லை.

மருத்துவ பணியாளர்கள் போராட்டம்:

இந்நிலையில், மருத்துவ பணியாளர்கள் போராட்டம் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் சுமார் 6, 7 குழுக்களாக உள்ளனர். அவர்களுடன் முன்னதாகவே பேசிவிட்டோம். அதோடு, போராட்டம் குறித்து, அவர்களின் அனைத்து சங்கங்களுடனும் பேசி நடவடிக்கை எடுப்போம் என்று அவர்களிடம் தெரிவித்துள்ளோம்.

இதையும் படிக்க : 2026 சட்டமன்ற தேர்தல்: திமுக உடன் கைக்கோர்க்கும் தேமுதிக.. எத்தனை இடங்கள் தெரியுமா?

நிரந்தரப் பணி கோரிக்கை பேஷனாகிவிட்டது:

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் 2013ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து, 2021 வரை அதிமுக ஆட்சிக்காலத்தில் பணியாற்றினர். அதிமுக ஆட்சியின்போது அவர்கள் தற்காலிக ஊழியர்களாக நியமிக்கப்பட்டனர். அதிமுக ஆட்சி காலம் வரை அவர்கள் எந்த கோரிக்கையையும் எழுப்பவில்லை. இப்போது அவர்கள் நிரந்தரப் பணி கோருகின்றனர். தற்போது, ​​அரசு தேர்தலுக்குத் தயாராகி வரும் நிலையில், அனைத்து தற்காலிக மற்றும் ஒப்பந்த ஊழியர்களிடமிருந்தும் நிரந்தரப் பணி கோரிக்கை ஒரு ‘பேஷன்’ ஆகிவிட்டது. நாங்கள் அவர்களுடன் பேசியுள்ளோம். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.