AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகத்தில் 2,106 பறக்கும் படைகள்.. “பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது”.. அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தல்..

2,106 Flying Squads Deployed in TN: தேர்தல் நடத்தை விதிகள் அமலான 12 மணி நேரத்தில் தமிழகத்தில் ரூ.1.2 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆவணங்கள் இருந்தால் பணம் உடனடியாக திருப்பி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சோதனையின் போது பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழகத்தில் 2,106 பறக்கும் படைகள்.. “பொதுமக்களை தொந்தரவு செய்யக்கூடாது”.. அர்ச்சனா பட்நாயக் அறிவுறுத்தல்..
தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 16 Mar 2026 12:08 PM IST

சென்னை, மார்ச் 16: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நேற்றைய தினம் (மார்ச் 15) முதல் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளதாகவும், மாநிலத்தில் 2,106 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.  தேர்தல் நடத்தை விதிகள் அமலான 12 மணி நேரத்தில் தமிழகத்தில் ரூ.1.2 கோடி ரொக்கம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ஆவணங்கள் இருந்தால் பணம் உடனடியாக திருப்பி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், சோதனையின் போது பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க: தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்த அதிமுக.. இபிஎஸ் வெளியிட்ட அறிவிப்பு!!

மார்ச் 30 முதல் வேட்புமனுத் தாக்கல்:

இதுகுறித்து சென்னையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 5.69 கோடி வாக்காளர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். வாக்குச்சாவடி விவரங்கள் தொடர்பான ஏற்கெனவே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். எந்த வாக்குச்சாவடியில் வாக்கு உள்ளது என்பதை வாக்காளர்கள் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். வாக்குச்சாவடிகளில் செல்போன்களை பாதுகாப்பாக வைக்க பெட்டக வசதி செய்து தரப்படும். விடுமுறை நாள் தவிர அனைத்து நாள்களிலும் வேட்புமனு பெறப்படும். மார்ச் 30 முதல் ஏப்.6 வரை காலை 11 மணி முதல் பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று கூறினார்.

புதிய வாக்காளர்கள் விண்ணப்பிக்கலாம்:

மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என தேர்தல் பறக்கும் படைக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. மக்கள் தகுந்த ஆவணங்களை வைத்திருந்தால் பணத்தை உடனே திருப்பித்தர உத்தரவிட்டுள்ளோம். 18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள் மார்ச் 26ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கலாம். இதுவரை ரூ.1.26 கோடி மதிப்புள்ள ரொக்கம், பரிசுப்பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே பிரச்னைகளுக்கு அனுமதி கேட்கப்பட வேண்டும் என்றார்.

மேலும் படிக்க: திமுக கூட்டணியில் இருந்து விலக தவாக முடிவு?.. பரபரப்பை கிளப்பிய வேல்முருகன்..

தமிழகத்திற்கு ஏப்.23ல் தேர்தல்:

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று மாலை ஆலோசனை:

தொடர்ந்து, தேர்தல் நேர விதிமுறைகள், தேர்தல் செலவு தொகை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் இன்று மாலை 3 மணிக்கு மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.

Follow Us