Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சுற்றுப் பயண விவரம்…புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டார்!

TVK Election Manifesto Team: சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு மண்டலம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் விவரம் வெளியிடப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார்.

தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சுற்றுப் பயண விவரம்…புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டார்!
தவெக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு சுற்றுப்பயணம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 29 Jan 2026 13:57 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை கட்சியின் தலைவர் விஜய் அண்மையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. இதற்கான பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவினர் ஒவ்வொரு மண்டலத்தில் உள்ள பொதுமக்கள், நெசவாளர்கள், மாணவர்கள், மீனவர்கள், விவசாய சங்கங்களின் உறுப்பினர்கள், பல தொழில் அமைப்புகளை சார்ந்தவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோரை நேரடியாக சந்தித்து கருத்துக்களை பெற உள்ளது. இவர்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையில், தமிழக மக்களையும், ஒட்டுமொத்த தமிழகத்தையும் வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் வகையில் தவெக தேர்தல் அறிக்கை தயார் செய்யப்படும்.

மேலும் படிக்க:  2026 சட்டமன்ற தேர்தல்: திமுக உடன் கைக்கோர்க்கும் தேமுதிக.. எத்தனை இடங்கள் தெரியுமா?

  • தெற்கு மண்டலம்: பிப்ரவரி 1- ஆம் தேதி ( ஞாயிற்றுக்கிழமை)- தேனி, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தென்காசி, சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய பகுதிகள். கூட்டம் நடைபெறும் இடம்: மதுரை.
  • கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடற்கரை மண்டலம்: பிப்ரவரி 4-ஆம் தேதி ( புதன்கிழமை)- கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி (இணைப்பு), தூத்துக்குடி, ராமநாதபுரம். கூட்டம் நடைபெறும் இடம்: கடலூர்.
  • மேற்கு மண்டலம் ( கொங்கு மண்டலம்): பிப்ரவரி 7- ஆம் தேதி ( சனிக்கிழமை)- ஈரோடு, கோயம்புத்தூர், சேலம், திருப்பூர், கரூர், நாமக்கல், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய பகுதிகள். கூட்டம் நடைபெறும் இடம்: கோயம்புத்தூர்.
  • மத்திய மண்டலம் ( காவிரி டெல்டா மற்றும் மைய மாவட்டங்கள்): பிப்ரவரி 9-ஆம் தேதி ( திங்கள்கிழமை)- தஞ்சாவூர், திருச்சி, நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, அரியலூர், மயிலாடுதுறை ஆகிய பகுதிகள். கூட்டம் நடக்கும் இடம்: திருச்சிராப்பள்ளி.
  • வடக்கு மண்டலம் ( சென்னை மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்கள்): பிப்ரவரி 11- ஆம் தேதி ( புதன்கிழமை)- சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகள். கூட்டம் நடைபெறும் இடம்- சென்னை.

அதன்படி, ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள முக்கிய அரசு சாரா அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களை நேரடியாக இந்த குழு சந்திக்க உள்ளது. அப்போது, பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை நேரடியாக வழங்கும் வகையில் மக்கள் கருத்துப் பெட்டி அமைக்கப்பட உள்ளது. பயணம் மேற்கொள்ள முடியாத மக்களுக்காக சமூக வலைதளங்கள் மற்றும் இணையதளம் மூலமாக கருத்துக்கள் பெறப்படும். தேர்தல் அறிக்கை தயார் செய்யும் குழுவுக்கு அந்தந்த மாவட்ட கழக செயலாளர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: எடப்பாடி பழனிசாமி தயாரா…திடீரென சவால் விட்ட ஓபிஎஸ்..என்ன காரணம்?