Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

எடப்பாடி பழனிசாமி தயாரா…திடீரென சவால் விட்ட ஓபிஎஸ்..என்ன காரணம்?

O Panneerselvam: அதிமுகவில் இணைய தயாராக உள்ளதாகவும், எங்களை இணைக்க அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தயாராக உள்ளாரா என்று தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு டிடிவி தினகரன் வலியுறுத்த வேண்டும் என்று கூறினார்.

எடப்பாடி பழனிசாமி தயாரா…திடீரென சவால் விட்ட ஓபிஎஸ்..என்ன காரணம்?
எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் திடீர் சவால்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 29 Jan 2026 13:44 PM IST

தேனியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மாவட்ட நிர்வாகிகளுடன் ஓ. பன்னீர்செல்வம் இன்று வியாழக்கிழமை (ஜனவரி 29) ஆலோசனை மேற்கொண்டார். இதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்கான இயக்கத்தை நாங்கள் நடத்தி நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராமநாதபுரம் தொகுதி சுயேட்சையாக நான் பலாப்பழம் சின்னத்தில் போட்டியிட்டேன். எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்வதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டேன். தமிழகத்தில் எனது பெயரில் உள்ளவர்கள் போல 6 பேரை நான் போட்டியிட்ட தொகுதியில் எனக்கு எதிராக நிறுத்தி இருந்தனர். எப்படியாவது ஓ. பன்னீர் செல்வத்தை தோற்கடித்துவிட வேண்டும். தொண்டர்களும், தமிழக மக்களும் என் பக்கம் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பல்வேறு திட்டமிட்டனர்.

தனிக்கட்சியும் தொடங்வில்லை-கூட்டணியும் அமைக்கவில்லை

இந்த சூழ்ச்சிகளை எல்லாம் முறியடித்து, அதிமுகவின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதற்காக இந்த கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. எங்களுடைய ஒரே நோக்கம் சட்டம் போராட்டம் நடத்தி அதிமுகவில் அடிப்படை தொண்டர்களின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதே ஆகும். தேர்தலுக்காக தனி கட்சி தொடங்குவதற்கோ, போட்டியிடுவதற்கோ நாங்கள் தற்போது வரை முடிவு செய்வதில்லை. பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும். அசைக்க முடியாத சக்தியாக இருந்த அதிமுக மீண்டும் உருவாக வேண்டும் என்பதற்காகவே எங்கள் போராட்டம் தொடரும்.

மேலும் படிக்க: இஸ்லாமியர்களுக்கு வெளியிட்ட 5 முக்கிய அறிவிப்புகள் – தஞ்சையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியீடு

அதிமுக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்

எங்களது போராட்டம் முடிவுக்கு வர வேண்டும் என்றால் பிரிந்து கிடக்கின்ற அதிமுக சக்திகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும். இன்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு கழகத்தின் தலைமைக்கு கட்டுப்படுவோம் என்று தொண்டர்கள் கூறியுள்ளனர். எதிரும், புதிருமாக இருந்த எடப்பாடி கே. பழனிசாமியும், டிடிவி தினகரனும் தேசிய ஜனநாயக கூட்டணியில் ஒன்றிணைந்துள்ளனர். நாங்கள் இணைய வேண்டும் என்பதை டிடிவி தினகரன் வலியுறுத்த வேண்டும். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.

எடப்பாடி கே.பழனிசாமி தயாரா

அப்படி அனைவரும் ஒன்றிணைந்தால் தேசிய ஜனநாயக கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெரும். அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுவில் இருந்து வெளியேறிய மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்தியலிங்கம் ஆகியோரால் தான் 2- ஆம் கட்ட யுத்தம் தொடங்கப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவில் எந்த விதமான குழப்பமும் இல்லை. தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த கழகம் தொடங்கப்படவில்லை. அதிமுகவின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகவே தொடங்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இணைவதற்கு நாங்கள் தயாராக உள்ளோம். எங்களை இணைப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராக உள்ளாரா என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: பாஜக – அதிமுக வலுவான கூட்டணி.. திமுகவுக்கு சவாலாக உருவெடுக்கும் என்டிஏ