பாஜக – அதிமுக வலுவான கூட்டணி.. திமுகவுக்கு சவாலாக உருவெடுக்கும் என்டிஏ
BJP–AIADMK Alliance : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் பாஜக - அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி திமுகவுக்கு எதிராக முக்கிய முகமாக மாறி வருகிறது. களத்தில் அக்கட்சி தொண்டர்கள் ஒற்றுமையாக செயலாற்றி வருவது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.
சென்னை ஜனவரி 28 : தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் பரபரப்பாகி வருகிறது. கடந்த சில தேர்தல்களில் பெரிதும் வரவேற்பை பெறாத தேசிய ஜனநாயக கூட்டணி இந்த சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை திமுகவிற்கு (DMK) எதிராக முக்கிய முகமாக மாறி வருகிறது. பாஜக – அதிமுக தலைமையிலான தேசிய ஜனநயக கூட்டணி, மாநிலம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் பணியில் வேகமாக செயல்பட்டு வருகிறது. அரசியல் நிலைத்தன்மை, தெளிவான இலக்கு ஆகியவற்றை முன்னிறுத்தி, 2026 தேர்தலுக்கான தயார் பணிகளை கூட்டணி தீவிரப்படுத்தியுள்ளது.
பாஜக–அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தனது அடித்தளத்தை வலுவாக்கி தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகின்றன. கடந்த 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னையில் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற எடப்பாடி பழனிசாமி மற்றும் பாஜக மூத்த தலைவர் பியூஷ் கோயல் சந்திப்பு, 234 சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஒருங்கிணைப்பின் தொடக்கமாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : முற்றும் திமுக – காங்., மோதல்.. ராகுல் காந்தியை சந்திக்கும் கனிமொழி..




என்டிஏ கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் வட தமிழ்நாட்டில் அதிகரிக்கும் செல்வாக்கு
இதன் தொடர்ச்சியாக, முன்பு வேறுபட்டிருந்த பாஜக மற்றும் அதிமுக பூத் அளவிலான பணியாளர்கள் தற்போது இணைந்து தேர்தல் பிரசாரம் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பாமக என்டிஏ கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களில் அக்கட்சியின் வாக்குகள் நேரடியாக தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், அமித் ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்களின் தொடர் வருகைகள் மற்றும் மோடி பொங்கல் போன்ற பிரசாரங்கள் கூட்டணி கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. பிரதமர் மோடி மதுராந்தகத்தில் நடைபெறவுள்ள தேசிய ஜனநயாக கூட்டணியில் மாநாட்டில் பங்கேற்ற நிலையில், அவர் பேசிய வளர்ச்சி திட்டங்கள், வேலைவாய்ப்பு மற்றும் விவசாயம் போன்ற விஷயங்களை மையமாகக் கொண்டு தேர்தல் பரப்புரையை முன்னெடுத்து வருகின்றன.
இதையும் படிக்க : “திமுக எந்த கட்சியை கூட்டணியில் சேர்த்தாலும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டோம்”.. திருமாவளவன்
திமுக – காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட விரிசல்
மறுபுறம், திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸுடன் உள்ள தொகுதி பங்கீடு தொடர்பான கருத்து வேறுபாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மேலும் இரண்டு கட்சிகளிலும் தலைவர்கள் ஒருவரையொருவர் தாக்கி பேசிவருவது அக்கட்சியினருக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஒற்றுமையாக செயல்பட்டு வருவது அக்கட்சியினருக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.