Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கையெழுத்தாகும் பாஜக – அதிமுக கூட்டணி ஒப்பந்தம்.. பாஜகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும்?

ADMK - BJP Alliance: ஜனவரி 22, 2026 தேதியான இன்று அதிமுக–பாஜக இடையேயான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி ஒப்பந்தத்தில் பாஜகவிற்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்தும் இடம்பெற்றிருக்கும். அதேபோல், பிற கட்சிகளுடன் கூட்டணி ஒப்பந்தங்களும் கையெழுத்தாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கையெழுத்தாகும் பாஜக – அதிமுக கூட்டணி ஒப்பந்தம்.. பாஜகவுக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Jan 2026 07:02 AM IST

சென்னை, ஜனவரி 22, 2026: தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் ஓரிரு மாதங்களே இருக்கக்கூடிய சூழலில், அதிமுக–பாஜக கூட்டணி ஒப்பந்தம் ஜனவரி 22ஆம் தேதி கையெழுத்தாகிறது. இன்றைய தினம் பிற கட்சிகளுடனான கூட்டணி ஒப்பந்தங்களும் கையெழுத்தாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.  2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில், தமிழக அரசியலும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. வரக்கூடிய தேர்தலில் அதிமுக எப்படியாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது.

பின்னர் அதிமுக, பாஜகவுடன் இருந்து விலகுவதாக அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, 2025ஆம் ஆண்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்திற்கு வருகை தந்தபோது, மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதாக அதிகாரப்பூர்வமாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

50 இடங்களை கேட்கும் பாஜக:

அதனைத் தொடர்ந்து, வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலை இரண்டு கட்சிகளும் ஒன்றாக சந்திக்க உள்ளன. 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு அதிமுக கூட்டணியில் சுமார் 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இந்த முறை, பாஜக அதிமுக கூட்டணியில் அதிக இடங்கள் கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, 50 இடங்கள் கேட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: திமுகவின் வாரிசு ஆட்சியால்… டிடிவி தினகரனுக்கு அமித் ஷா வரவேற்பு

தேர்தல் பணிகளுக்காக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் நேற்றைய தினம் தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற டிடிவி தினகரன் மீண்டும் அதே கூட்டணியில் இணைந்தார். அப்போது பேசிய டிடிவி தினகரன், “எங்களுக்குள் இருப்பது பங்காளிச் சண்டைதான்; விட்டுக் கொடுத்தவர் கெட்டுப் போவதில்லை” எனக் குறிப்பிட்டு, பியூஷ் கோயலை நேரில் சந்தித்து மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார்.

கையெழுத்தாகும் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம்:

இந்நிலையில், ஜனவரி 22, 2026 தேதியான இன்று அதிமுக–பாஜக இடையேயான கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி ஒப்பந்தத்தில் பாஜகவிற்கு எத்தனை இடங்கள் ஒதுக்கப்படும் என்பது குறித்தும் இடம்பெற்றிருக்கும். அதேபோல், பிற கட்சிகளுடன் கூட்டணி ஒப்பந்தங்களும் கையெழுத்தாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க: தமிழகத்தில் இருந்து வெளியேறுகிறது ஏர் இந்தியா நிறுவனம்…சென்னை-துபாய் விமான சேவை நிறுத்தம்…என்ன காரணம்?

பாஜகவிற்கு ஒதுக்கப்படும் இடங்களில் கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு இடங்கள் டிடிவி தினகரனுக்கு ஒதுக்கப்படும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானவுடன், ஜனவரி 23, 2026 தேதியான நாளை நடைபெற இருக்கக்கூடிய அதிமுக–பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் இடம்பெறுவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.