AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குடும்பத்துடன் இணைந்து கணவனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட மனைவி.. உ.பியில் பகீர் சம்பவம்!

Wife Killed Husband With Help Of Family | உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஜித்தேந்திர குமார் என்ற நபர் 9 ஆண்டுகள் காதலித்து ஜோதி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த நிலையில், ஜோதி தனது குடும்பத்துடன் இணைந்து கணவரை கொலை செய்துள்ளார்.

குடும்பத்துடன் இணைந்து கணவனை கொலை செய்து தூக்கில் தொங்க விட்ட மனைவி.. உ.பியில் பகீர் சம்பவம்!
கொலை செய்யப்பட்ட ஜித்தேந்திர சிங் மற்றும் கொலை செய்த ஜோதி
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 02 Feb 2026 21:11 PM IST

பரேலி, பிப்ரவரி 02 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், எட்டாவா மாவட்டத்தில் உள்ள பவுபோராவை சேர்ந்தவர் ஜித்தேந்திர குமார். 33 வயதாகும் இவர் மத்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இதற்காக அவர் கைலாஷாபுரத்தில் உள்ள கிர்ஜா சங்கர் என்ற பகுதியில் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். அவரின் மனைவி ஜோதி அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணியாற்றி வந்துள்ளார்.

வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கிய ஜித்தேந்திர குமார்

ஜித்தேந்திர குமார் ஜோதியை சுமார் 9 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துக்கொண்டுள்ளார். அவர் பள்ளி படிக்கும்போதில் இருந்தே ஜோதியை காதலித்து வந்த நிலையில் 2025, நவம்பர் மாதம் அவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இவ்வாறு காதலித்த பெண்ணை திருமணம் செய்துக்கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஆசைப்பட்ட ஜித்தேந்திர குமார் ஜனவரி 26, 2026 அன்று தனது வீட்டில் பிணமாக தூக்கில் தொங்கியுள்ளார்.

இதையும் படிங்க : ‘லட்சகணக்கில் பண மோசடி’.. பெண் மீது பரபரப்பு புகாரளித்த கணவர்கள்

விசாரணையில் தெரிய வந்த அதிர்ச்சி தகவல்

ஜித்தேந்திர குமார் தூக்கில் தொங்கிய நிலையில், அது குறித்து ஜோதி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், பிரேத பரிசோதனை முடிவில் ஜித்தேந்திர குமார் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ஜோதியிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் முன்னுக்கு பின் முரணமாக பேசியுள்ளார்.

இதையும் படிங்க : உலகின் 2- ஆவது குளிரான பகுதி எது தெரியுமா..அதுவும் இந்தியாவில் தான் உள்ளது!

கொலை குறித்த பரபரப்பு வாக்குமூலம்

இதனை தொடர்ந்து ஜோதியிடம் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் ஜோதி, ஜோதியின் பெற்றோர் மற்றும் சகோதரர் ஆகியோர் இணைந்து ஜித்தேந்திர குமாரை கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டது தெரிய வந்துள்ளது. ஜித்தேந்திர குமார் சூதாட்டத்தில் ஆர்வம் கொண்டு இருந்துள்ளார். இதனால் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பகுதியை அவர் சூதாட்டத்தில் செலுத்தி வந்துள்ளார்.

இதன் காரணமாக கணவன் மற்றும் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பாதிக்கும் பணத்தை சூதாட்டத்தில் செலுத்தி வந்த ஜித்தேந்திர குமார் ஒரு கட்டத்தில் ஜோதியின் பணத்தை எடுத்து சூதாட்டத்தில் செலுத்தியுள்ளார். இது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஜோதியின் பெற்றோருடன் அவர் சண்டையிட்டுள்ளார். இதனால் அவரை தீர்த்துக்கட்ட முடிவு செய்த ஜோதியின் குடும்பத்தினர் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளனர்.

Follow Us