உலகின் 2- ஆவது குளிரான பகுதி எது தெரியுமா..அதுவும் இந்தியாவில் தான் உள்ளது!
2nd Coldest Place In World: உலகத்தில் 2- ஆவது குளிர்ச்சியான பகுதி எங்கு உள்ளது தெரியுமா. அதுவும் இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மாநிலம், லடாக் பகுதியில் உள்ள டிராஸில் பகுதி ஆகும். இந்தப் பகுதியில் மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைவாக காணப்படும்.
ரஷ்யாவில் இருக்கும் குறைந்த வெப்பநிலையை விட இந்தியாவில் அதைவிட குறைவான வெப்பநிலை இருக்கும் ஒரு பகுதி உள்ளது. அந்தப் பகுதி வேறெதுவமில்லை ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியாகும். இந்த பகுதியில் மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்தப் பகுதியானது இந்தியாவிலேயே மிகவும் குளிரான இடமாகவும், உலகிலேயே 2- ஆவது குளிரான இடமாகவும் கூறப்படுகிறது. டிராஸ் என்று அழைக்கப்படும் பகுதி லடாக்கின் நுழைவு வாயில் ஆகும். இந்த பகுதியில் எலும்பை உறைய வைக்கும் குளிர்காலம் மற்றும் பிரம்மிக்க வைக்கும் இமயமலை நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற இந்த நகரம், கடுமையான கால நிலையிலும் மனிதனின் மேல் தன்மைக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. டிராஸ் கடல் மட்டத்தில் இருந்து 10,800 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
லடாக்கில் அமைந்துள்ள டிராஸ் பகுதி
இந்தப் பகுதியானது சோஜி லா பாஸ் மற்றும் கார்கிலுக்கு இடையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 1- இல் அமைந்துள்ளது. டிராசில் உள்ள கடுமையான குளிர் அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும் என்பதை ஒரு பெண் விளக்கும் ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோ வைரல் ஆகி வருகிறது. அந்த வீடியோவில் துணிகளை உணர்த்துவது போன்ற அன்றாட நடவடிக்கைகள் குளிரால் எவ்வாறு பாதிக்கப்படும் என்பது பதிவாகியுள்ளது. குளிர் காலத்தில் சாதாரண வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருப்பதால், டிராஸில் வசிப்பவர்கள் தங்களது துணிகளை காயவைத்தால் அவை பலகை போல மாறி விடுகிறது.
மேலும் படிக்க: அமெரிக்காவில் கடும் பனிப்புயல்.. 13,000 விமானங்கள் ரத்து.. பொதுமக்கள் பாதிப்பு!




உலகில் 2- ஆவது குளிரான இடம்
அதே நேரத்தில் சூடான மேகி கிண்ணம் சாப்பிடுவதற்கு முன்பே உறைந்து விடும். கடந்த 1995 ஆம் ஆண்டில் இந்த நகரம் மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்தியாவின் மிகவும் குளிரான இடம் மற்றும் உலகில் 2- ஆவது குளிரான மக்கள் வசிக்கும் இடம் லடாக்கில் உள்ள இந்த சிறிய நகரமாகும். இங்கு வெப்ப நிலை வழக்கமாக மைனஸ் 30 டிகிரி செல்சியஸ் ஆக குறைகிறது. சில நீர் நிலைகள் உறைந்து விடுகிறது.
அக்டோபர் முதல் ஏப்ரல் மாதம் வரை
சாலைகளி அடர்ந்த பனிகள் படர்ந்து மறைந்துவிடுகிறது. மேலும், கடந்த 1995 ஆம் ஆண்டில் டிராஸில் மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் உச்ச நிலை பதிவாகி இருந்தது. இதனால் மனிதர்கள் வாழும் மிகவும் குளிரான இடங்களில் ஒன்றாக மாறியது. உலகின் 2- ஆவது குளிரான இடமாக டிராஸ் உள்ளது. டிராஸில் 22 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்த நகரத்தை விட குளிரான ஒரே இடம் சைபீரியாவில் உள்ள ஓமியாகோன் ஆகும். டிராஸில் குளிர்காலம் பொதுவாக அக்டோபர் பாதியில் இருந்து ஏப்ரல் மாத ஆரம்பம் வரை நீடிக்கும். அப்போது, கடுமையான காற்று கடும் பனிப்பொழிவு வீசும்.
மேலும் படிக்க: அமெரிக்காவில் வீசிய பெரும் புயல்…12000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து!