பெண் விமானிகள் குறித்து அஜித் பவார் வெளியிட்ட பழைய எக்ஸ் பதிவு வைரல்!
Ajith Pawar Old X Post Goes Viral On Internet | மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் அஜித் பவார் பயணம் செய்த விமானத்தை பெண் பயணிகள் இயக்கிய நிலையில், அது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், அஜித் பவாரின் பழைய எக்ஸ் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
சென்னை, ஜனவரி 30 : தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக விமானத்தில் சென்ற மகாராஷ்டிரா (Maharashtra) துணை முதலமைச்சர் அஜித் பவார், விமான விபத்தில் உயிரிழந்தார். அவர் பயணம் செய்த விமானத்தை பெண் விமானிகள் ஓட்டிச் சென்ற நிலையில், அது குறித்து பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அஜித் பவார் பெண் விமானிகள் குறித்து பதிவிட்டிருந்த பழைய எக்ஸ் பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர் என்ன கூறியுள்ளார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற அஜித் பவார் விமான விபத்தில் பலி
மகாராஷ்டிரா மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஜனவரி 28, 2026 அங்கு தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக அந்த மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவார் தனி விமானத்தில் சென்றுக்கொண்டு இருந்தார். அந்த விமானத்தை விமானி சுமித் கபூர் மற்றும் துணை விமானி சாம்பவி பகத் ஆகியோர் இயக்கினர். இந்த நிலையில், விமானம் பாராமதி விமான நிலையத்தை நெருங்கியதும் தரையிறங்க விமானிகள் முயற்சி செய்துள்ளனர்.
இதையும் படிங்க : மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்படும் இளைஞர்கள்.. இந்திய மனநல மருத்துவர்கள் ஷாக் தகவல்!
ஆனால், காலை 8.45 மணிக்கு அந்த விமானம் திடீரென ரேடாரின் கண்காணிப்பில் இருந்து விலகியுள்ளது. அப்போது விமானிகள் விமானத்தை தரை இறக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், தரையிறங்கும் போது அந்த விமானம் கீழே விழுந்து வெடித்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், விமானத்தில் பயணம் செய்த அஜித் பவார் மற்றும் அவருடன் பயணம் செய்த 4 பேர் பரிதாமபாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், பெண் பயணிகள் விமானத்தை இயக்கியதன் காரணமாக தான் விபத்து நடைபெற்றதாக சிலர் கூறி வந்தனர். இந்த நிலையில் தான் அஜித் பவாரின் பழைய பதிவு வைரலாகி வருகிறது.
வைரலாகும் அஜித் பவாரின் பழைய எக்ஸ் பதிவு
Ajit Pawar’s aircraft was piloted by a woman😭😭 pic.twitter.com/QJZhkXr3Fi
— Raniisaaa (@Raniisa_) January 28, 2026
அந்த பதிவில், நாம் ஹெலிகாப்டர் அல்லது விமானத்தில் பயணம் செய்யும்போது, விமானம் சீராக தரையிறங்கினால் அந்த விமானி ஒரு பெண் என்பதை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு தான் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.



