Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிப்.5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்…இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை?

Tamil Nadu Cabinet Meeting: தமிழக அமைச்சரவைக் கூட்டம் அடுத்த மாதம் பிப்ரவரி 5- ஆம் தேதி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கூட்டத்தில் இடைக்கால பட்ஜெட்டில் எந்த மாதிரியான முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள உள்ளது.

பிப்.5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்…இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை?
பிப்ரவரி 5- இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 30 Jan 2026 13:52 PM IST

தமிழகத்தில் 2026- ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் கடந்த ஜனவரி 20- ஆம் தேதி தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. 6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்ற விதிகளுக்கு ஏற்ப இந்த கூட்டத் தொடர் நடைபெற்றது. இந்த நிலையில், ஆளும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இதைத் தொடர்ந்து, சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, இதற்கு முன்னதாக தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு அரசு ஆலோசனை திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி, அடுத்த மாதம் பிப்ரவரி 13 அல்லது 14- ஆம் தேதி பட்ஜெட்டை தாக்கல் செய்யலாம் என தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

பிப்ரவரி 5- இல் அமைச்சரவைக் கூட்டம்

இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற பிப்ரவரி 5- ஆம் தேதி ( திங்கள்கிழமை) மதியம் 12- மணிக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திமுக ஆட்சியின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் நெருங்குவதால் தற்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டால், அது இடைக்கால பட்ஜெட்டாக இருக்கும். இந்த பட்ஜெட்டில் எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒ5துக்க வேண்டும், முக்கிய அறிவிப்புகள், தமிழக மக்களை கவரும் வகையில் என்ன மாதிரியான அறிவிப்புகளை வெளியிடலாம் என்பது தொடர்பாகவும், முக்கிய அம்சங்கள் குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்படும்.

மேலும் படிக்க: “சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு Vs என்டிஏ இடையே தான் போட்டி”.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி

4 நாள்கள் நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடர்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வாக்காளர்களை கவர்வதற்காக தமிழக நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது. அதுவும், இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரை 4 நாட்கள் நடத்தி முடிக்கலாம் எனவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்.

தேர்தல் ஆணைய அதிகாரிகள் வருகையை பொறுத்து

இதனிடையே, தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு வந்து ஆலோசனை செய்ய இருப்பதால், அவர்களின் வருகையை பொறுத்து பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான தேதி இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் விதமாக பல்வேறு அறிவிப்புகள் இருக்கலாம் எனவும், அதிலும் குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000-இல் இருந்து ரூ.2,500- ஆக உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளன.

மேலும் படிக்க: தமிழக பாஜகவின் அடுத்த கட்ட நகர்வு..களமிறங்கிய எல்.முருகன்- அண்ணாமலை!