“சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு Vs என்டிஏ இடையே தான் போட்டி”.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி
Tamil Nadu Vs NDA: பாஜகவுடன் இருப்பவர்கள் அனைவரும் ஊழல் வாதிகள் தான், உச்சநீதிமன்றம் வரை சென்று ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் தான் அதிமுக. கூட்டணியில் இல்லாத சமயத்தில் அதிமுக மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்திர்கள். இப்போது உங்கள் வாஷிங் மெஷினில் அவர்களை எல்லாம் வெளுத்துவிட்டீர்களா? என்று அவர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை, ஜனவரி 30: நடக்குப்போகும் சட்டமன்றத் தேர்தல் தமிழ்நாடு Vs என்டிஏ என்ற கோணத்தில் நடக்கிறது. தமிழகத்தில் என்டிஏ கூட்டணி கட்டாயப்படுத்தி ஏற்படுத்தப்பட்டது என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் தமிழ்நாடு சம்மிட் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சிகளால் முடியாது என்ற சொல்லப்பட்ட திட்டங்களைக் கூட நிறைவேற்றி உள்ளோம் என்றார். தமிழ்நாட்டின் திட்டங்கள் நாட்டின் பல பகுதிகளுக்கு சென்று சேர்ந்து மக்கள் பயனடைந்தால் அதுவே தனக்கு மகிழ்ச்சி என்றும் அவர் கூறியுள்ளார். திமுக ஆட்சி கொண்டு வந்துள்ள திட்டங்களை பல மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன என்று பெருமிதம் கூறினார்.
இதையும் படிக்க : பரந்தூர் விமான நிலையத்தால் சென்னைக்கு மிகப்பெரிய ஆபத்து? ஆராய்ச்சியாளர்கள் சொல்வதென்ன?
எதிர்கட்சிகள் மீது விமர்சனம்:
நீட் தேர்வு விளக்கு போன்ற மக்கள் வாழ்க்கையுடன் நேரடியாக தொடர்புடைய முக்கியமான பிரச்சினைகள் குறித்து அக்கறையுடன் கேள்வி எழுப்ப வேண்டிய நிலையில், எதிர்க்கட்சியினர் ஏன் தயங்குகிறார்கள் என்ற கேள்வி இன்று பலரின் மனதில் எழுகிறது. கூட்டணிக்கு தலைமை தாங்குவது குறித்து வெளிப்படையாக விமர்சிக்க ஏன் அவர்கள் அஞ்சி நடுங்குகிறார்கள்?
தமிழ்நாட்டின் மீது அழுத்தமாக திணிக்கப்பட்டுள்ள பல திட்டங்கள் குறித்து உறுதியான குரலில் பேசுவதற்கான திராணி அவர்களிடம் ஏன் காணப்படவில்லை? நெஞ்சை நிமிர்த்தி, மக்களுக்காக கேள்வி எழுப்பும் துணிவு இல்லாதவர்கள், தமிழ்நாட்டின் தன்மானத்தை காக்க முன்னணியில் வந்து எப்படிப் பேச முடியும் என்ற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது.
தமிழ்நாடு Vs என்டிஏ தேர்தல்:
அதனால்தான் வரவிருக்கும் தேர்தலை நான் “ தமிழ்நாடு Vs என்டிஏ தேர்தல்” என்று அழுத்தமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். வழக்குகளால் மிரட்டப்பட்டு, முழுக்க முழுக்க சுயநல அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்த என்டிஏ கூட்டணி, அழுத்தத்துக்கும் அடிமைத்தனத்துக்கும் அடையாளமாகவே இன்று தமிழ்நாட்டு மக்கள் பார்க்கிறார்கள். நான் இதை உறுதியாகச் சொல்கிறேன். இந்த நிகழ்ச்சியிலும், எதிர்காட்சியிலிருந்த பலரும் தங்களுடைய கருத்துகளை வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்கள்.
அவர்களுடைய கருத்துகளை நான் நிச்சயமாக உள்ளங்கொண்டுள்ளேன் என்று நினைத்திருக்கிறேன். அதில் ஏற்பட்ட தவறுகளை ஒதுக்கி வைத்து, ஆக்கபூர்வமான பாதையை எம்மனத்தில் எடுத்துக்கொண்டு, திராவிட மாடல் 2.0 அரசமைப்பை நிச்சயம் பாதுகாப்பேன் என்ற உறுதியையும் இங்கு வெளிப்படுத்துகிறேன்.
இதையும் படிக்க : 2026 சட்டமன்ற தேர்தல்: திமுக உடன் கைக்கோர்க்கும் தேமுதிக.. எத்தனை இடங்கள் தெரியுமா?
வாஷிங் மெஷினில் வெளுத்துவிட்டீர்களா?
பாஜகவுடன் இருப்பவர்கள் அனைவரும் ஊழல் வாதிகள் தான், உச்சநீதிமன்றம் வரை சென்று ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் தான் அதிமுக. கூட்டணியில் இல்லாத சமயத்தில் அதிமுக மீது பல ஊழல் குற்றச்சாட்டுகளை வைத்திர்கள். இப்போது உங்கள் வாஷிங் மெஷினில் அவர்களை எல்லாம் வெளுத்துவிட்டீர்களா? என்று அவர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.