40 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட பாம்பு எலும்புகள், தற்போது புதிய அழிந்துபோன பாம்பு இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த இனத்திற்கு “ Paradoxophidion richardoweni என பெயரிடப்பட்டுள்ளது. இவை இங்கிலாந்தின் தெற்குக் கரையில் உள்ள ஹோர்டில் கிளிஃப் பகுதியில் 1981ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டவை. சுமார் 3.7 கோடி ஆண்டுகளுக்கு முன்பு (Eocene காலம்) வாழ்ந்த இந்த பாம்பு, இன்றைய “மேம்பட்ட” பாம்பு இனங்கள் தோன்றிய விதத்தை புரிந்து கொள்ள உதவக்கூடும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கிடைத்தது முதுகெலும்புப் பகுதிகள் மட்டுமே என்றாலும், இது இன்றைய பெரும்பாலான பாம்புகள் சேர்ந்த Caenophidian குழுவின் ஆரம்ப கிளையாக இருக்கலாம் என ஆய்வு தெரிவிக்கிறது