Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஸ்பெயினை உலுக்கிய ரயில் விபத்து.. 21 பேர் பரிதாப பலி.. அதிர்ச்சி சம்பவம்!

21 Killed In Spain Train Accident | ஸ்பெயினில் தனியாருக்கு சொந்தமான அதி விரைவு ரயில் ஒன்று, அரசின் அதி விரைவு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளான நிலையில் 21 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். அங்கு தொடர் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

ஸ்பெயினை உலுக்கிய ரயில் விபத்து.. 21 பேர் பரிதாப பலி.. அதிர்ச்சி சம்பவம்!
விபத்துக்கு உள்ளான ரயில்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 19 Jan 2026 08:46 AM IST

மாட்ரிட், ஜனவரி 19 :  ஸ்பெயினில் (Spain) கார்டோபா மாகாணத்தில் மலகா பகுதியில் இருந்து மாட்ரிட் – பூர்டா டி அதோசா நகரை நோக்கி சென்ற ஐரியோ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான அதி விரைவு ராயில் ஒன்று திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அப்போது ரயில் சென்றுக்கொண்டு இருந்த தண்டவாளத்தில் இருந்து வெளியேறி மற்றொரு தண்டவாளத்தில் செல்ல தொடங்கியுள்ளது. அப்போது, மாட்ரிட் நகரில் இருந்து ஹூவெல்லா நோக்கி சென்றுக் கொண்டு இருந்த அரசின் அதி விரைவு ரயில் மீது மோதி கடும் விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

பெட்டிகளுக்குள் சிக்கித் தவித்த பயணிகள்

இந்த பயங்கர ரயில் விபத்தில் பயணிகள் பெட்டிகளுக்குள் சிக்கிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்துள்ளனர். இதனால், வேறு வழியின்றி ரயிலின் ஜன்னல்களை உடைத்துக்கொண்டு பயணிகள் வெளியே வர தொடங்கியுள்ளனர். அப்போது சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ரயிலில் இருந்த பயணிகள் பலர் காப்பாற்றப்பட்ட நிலையில், இந்த விபத்தில் மொத்தம் 10 பேர் பலியானதாக அப்போது தகவல் வெளியானது.

இதையும் படிங்க : 2 மகன்களை கொடூரமாக கொலை செய்த இந்திய வம்சாவளி தாய்.. அமெரிக்காவில் பயங்கரம்!

21 பேரை பலி வாங்கிய ஸ்பெயின் ரயில் விபத்து

இந்த ரயில் விபத்தில் 10 பேர் பலியானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. இந்த ரயில் தடம் புரண்டு விபத்துக்கு உள்ளானபோது, நிலநடுக்கம் ஏற்பட்டதை போல இருந்ததாக சிலர் கூறியுள்ளனர். அப்போது திடீரென ரயிலுக்கு புகை பரவிய நிலையில், பயத்தில் உள்ளே இருந்த பயணிகள் வெளியேறியதாக சில கூறியுள்ளனர்.

இதையும்  படிங்க : ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட 75 நாடுகளுக்கு ஷாக் கொடுத்த அமெரிக்கா.. என்ன விஷயம்?

இந்த நிலையில், தனியார் நிறுவன ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது ஏன் என்பது தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.