Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2 மகன்களை கொடூரமாக கொலை செய்த இந்திய வம்சாவளி தாய்.. அமெரிக்காவில் பயங்கரம்!

Indian Origin Woman Brutally Killed Her Two Sons | இந்திய வம்சாவளியான நடராஜன், பிரியதர்ஷினி தம்பதி அமெரிக்காவில் வசித்து வரும் நிலையில், பிரியதர்ஷினி தனது இரண்டு மகன்களையும் கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2 மகன்களை கொடூரமாக கொலை செய்த இந்திய வம்சாவளி தாய்.. அமெரிக்காவில் பயங்கரம்!
கொலை செய்த பெண்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Jan 2026 07:49 AM IST

அமெரிக்கா, ஜனவரி 16 : அமெரிக்காவின் (America) நியூ ஜெர்சி (New Jersey) மாகாணத்தில் உள்ள ஹில்ஸ்பாரோ நகரை சேர்ந்தவர் நடராஜன். இவருக்கு 35 வயதில் பிரியதர்ஷினி என்ற மனைவி உள்ளார். இந்திய வம்சாவளியான இந்த தம்பதிக்கு 5 மற்றும் 7 வயதில் இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில், பிரியதர்ஷினி தனது இராண்டு மகன்களையும் கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த கொடூர கொலை சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

இரண்டு மகன்களை கொலை செய்த தாய் – பகீர் சம்பவம்

ஜனவரி 13, 2026 அன்று வழக்கம் போல மாலையில் வேலையை முடித்துவிட்டு நடராஜன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதாவது, நடராஜன் வேலைக்கு செல்லும் போது நன்றாக அவரது இரண்டு மகன்களும் படுக்கை அறையில் சுய நினைவு இன்றி கிடந்துள்ளனர். அதனை கண்டு அவர் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். பின்னர் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஈரான் உடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு 25% வரி.. இந்தியா மீதான வரி 75% ஆக உயருகிறது?

மனைவி ஏதோ செய்துவிட்டார் – போலீசாரிடம் கூறிய நடராஜன்

தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது தனது மகன்களை, மனைவி எதோ செய்துவிட்டார் என நடராஜன் கூறியுள்ளார். அப்போது காவல்துறையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : “நீ இறந்து விட்டாயா”…இளைஞர்கள் மத்தியில் பிரபலமான செல்போன் செயலி…என்ன அது!

தாயை கைது செய்து விசாரணை மேற்கொள்ளும் போலீசார்

சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், இந்த விவகாரம் தொடர்பாக பிரியதர்ஷினியை கைது செய்துள்ளனர். அவர் மீது ஆயுதங்களை பதுக்கி வைத்தல், கொலை செய்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.