AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சனி பகவானின் அருள் கிடைத்ததைக் காட்டும் அறிகுறிகள் என்னென்ன?

Saturn’s Blessings in Astrology: சனி மெதுவாக நகரும் கிரகமாக கருதப்படுகிறார். சனியின் வக்ர பார்வை வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுத்தும் என நம்பிக்கை. கருப்பு நாயை காண்பது சனி அருளின் அறிகுறி என கூறப்படுகிறது. யாசகரை சாப்பிடுவது காண்பதும் சுபமாக கருதப்படுகிறது. சனி அருள் கிடைத்தால் முன்னேற்றம் ஏற்படும் என ஜோதிடம் கூறுகிறது. மேலும் விரிவான தகவலை காணலாம்.

சனி பகவானின் அருள் கிடைத்ததைக் காட்டும் அறிகுறிகள் என்னென்ன?
சனீஸ்வர பகவான்Image Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 04 Mar 2026 14:35 PM IST

ஜோதிட சாஸ்திரத்தின் படி, ஒன்பது கிரகங்களில் மிக மெதுவாக நகரக்கூடிய சனி பகவான் ஒருவரின் செயல்களுக்கேற்ப பலன் அளிக்கும் ‘நீதி தேவனாக’ போற்றப்படுகிறார். சனியின் வக்ர பார்வை அச்சத்தை ஏற்படுத்தினாலும், அவரது முழுமையான அருள் கிடைக்கும்போது ஒருவரது வாழ்க்கையில் தடைகள் நீங்கி மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும். குறிப்பாக, நாம் வெளியே செல்லும் வேளையில் கருப்பு நாயைக் காண்பது அல்லது அது பால் குடிப்பதைப் பார்ப்பது நீண்ட நாள் சிக்கல்கள் தீரப்போவதைக் குறிக்கும் சுப அறிகுறியாகும்.

சனி பகவான் – அச்சமும் அருளும்

9 கிரகங்களில் மெதுவாக நகரக்கூடிய கிரகம் சனி தான். நீதி பகவானாக கருதப்படும் சனி பகவான் என்றாலே பலருக்கும் அச்சம் உருவாகும் என்பது ஜோதிட நம்பிக்கையாக கூறப்படுகிறது. சனியின் வக்ர பார்வை மனிதர்களின் வாழ்க்கையில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தும் என ஜோதிட சாஸ்திரம் விளக்குகிறது. அதே நேரத்தில், சனியின் அருள் கிடைத்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது. சனி பகவான் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதை சில அறிகுறிகள் மூலம் அறியலாம் என ஜோதிட வட்டாரங்களில் பேசப்படுகிறது.

கருப்பு நாயை பார்ப்பது – சுப அறிகுறி என நம்பிக்கை

ஜோதிடத்தின் படி ஒருவர் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கருப்பு நாயை காண்பது அல்லது அது பால் குடிப்பதை பார்ப்பது சனி அருளின் அறிகுறியாக கருதப்படுகிறது. இது வாழ்க்கையில் நீண்டநாள் நிலவி வந்த பிரச்சனைகள் படிப்படியாக முடிவுக்கு வரும் என்பதை உணர்த்தும் என கூறப்படுகிறது. சனியின் அருள் கிடைத்திருப்பதற்கான அடையாளமாக இது பார்க்கப்படுகிறது என ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது.

Also Read: சனிப்பெயர்ச்சி 2026.. விருச்சிக ராசியினருக்கு அடிக்குது ஜாக்பாட்.. சொத்துகளை அள்ளிக்கொடுக்கும் பஞ்சம சனி..

யாசகர்களை காணுதல் – ஆசீர்வாதத்தின் சின்னம்

பிச்சைக்காரர் சாப்பிடுவதை காண்பது ஒரு சுப அறிகுறியாக கருதப்படுகிறது என்று ஜோதிட நம்பிக்கை கூறுகிறது. அத்தகைய தருணம் சனியின் அருளும் ஆசீர்வாதமும் கிடைத்திருப்பதை குறிக்கும் என விளக்கப்படுகிறது. இதன் மூலம் நிதி நிலை உயரக்கூடும், பொருளாதார சிரமங்கள் குறையக்கூடும் என நம்பப்படுகிறது.

கருப்பு பசுவை காணுதல் – செழிப்பு வருவதாக நம்பிக்கை

கருப்பு பசுவை காண்பது அல்லது அது பால் கொடுப்பதை காண்பது சனி அருளின் அறிகுறி என ஜோதிடத்தில் கூறப்படுகிறது. இது வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செழிப்பும் வரவிருப்பதை உணர்த்தும் அடையாளமாக கருதப்படுகிறது. சனியின் அருள் கிடைத்தவர்களுக்கு தடைகள் நீங்கி முன்னேற்றம் ஏற்படும் என நம்பப்படுகிறது.

Follow Us