Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

“நீ இறந்து விட்டாயா”…இளைஞர்கள் மத்தியில் பிரபலமான செல்போன் செயலி…என்ன அது!

Are You Dead App: சீனாவில் நீ இறந்து விட்டாயா என்ற செல்போன் செயலி இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது. இந்த செயலியானது தற்போது கட்டண செயலியின் வரிசையில் இடம் பிடித்துள்ளது. அப்படி என்ன செயலி இது...விரிவாக பார்க்கலாம் .

“நீ இறந்து விட்டாயா”…இளைஞர்கள் மத்தியில் பிரபலமான செல்போன் செயலி…என்ன அது!
சீனாவில் மிகவும் பிரபலமான ஆர் யூ டெட் செயலி
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 13 Jan 2026 12:12 PM IST

நீ இறந்து விட்டாயா (ஆர் யூ டெட்) என்ற செயலி சீனாவில் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்த செயலியில் நாம் உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு 2 நாட்களுக்கு ஒரு முறை பதிவு செய்ய வேண்டும். அப்படி இல்லை என்றால், நாம் இறந்து விட்டதாக எண்ணி அந்த செயலி அவசர தொடர்புக்கு எச்சரிக்கை அனுப்பி விடும். கடந்த 2025 ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இந்த செயலியானது அண்மையில் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது, சீனாவில் அதிகம் பேர் பதிவிறக்கம் செய்யும் இந்த செயலி கட்டண செயலியாக மாறி உள்ளது. இந்த செயலியை உருவாக்கியவர்கள் குறித்த முழு விவரம் கிடைக்கப் பெறவில்லை. அவர்கள் கடந்த 1995- ஆம் ஆண்டுக்கு பிறகு பிறந்த 3 இளைஞர்கள் என்றும், ஜெங்சோவில் ஒரு சிறிய குழுவுடன் பணிபுரிவதாகவும் கூறப்படுகிறது. இந்த செயலியை ஆரம்பத்தில் உருவாக்குவதற்கு இந்திய மதிப்பில் ரூ.13 ஆயிரம் செலவானதாக கூறப்படுகிறது.

ரூ.1.3 கோடிக்கு நிதி திரட்ட முடிவு

தற்போது, அவர்கள் இந்த நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை ஒரு மில்லியன் யுவானுக்கு, அதாவது இந்திய மதிப்பில் ரூ.1.3 கோடிக்கு பெற்று நிதி திரட்ட திட்டமிட்டுள்ளனர். வரும் 2030- ஆம் ஆண்டுக்குள் சீனாவில் கிட்டத்தட்ட 200 மில்லியன் ஒற்றை நபர் குடும்பங்கள் இருக்கலாம் என்ற நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த செயலி தனியாக வேலை செய்பவர்கள், வீட்டை விட்டு வெளியே வசிக்கும் மாணவர்கள், தனியாக வாழ வேண்டும் என்று முடிவெடுக்கும் நபர்களுக்கு அடிப்படை பாதுகாப்பு உணர்வை இந்த செயலி வழங்கி வருகிறது.

மேலும் படிக்க: இன்று பூமிக்கு அருகில் வரும் வியாழன்.. வெறும் கண்களால் பார்க்கலாம்.. நாசா விஞ்ஞானிகள் சொன்ன சுவாரஸ்ய தகவல்கள்!

செயலியின் வெற்றிக்கு அதன் பெயரே காரணம்

இந்த செயலியின் வெற்றிக்கு அதன் கவர்ச்சிகரமான மற்றும் அதிர்ச்சியூட்டும் பெயரே முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும், இதற்கு பின்னால் உள்ள நிறுவனமான மூன்ஸ்கேப் டெக்னாலஜிஸ் விமர்சனங்களை கேட்டு வருவதாகவும், பெயரை மாற்ற முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சீனாவில் உள்ள மக்கள் தொகையில் 5- இல் ஒரு பங்கு 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.

கட்டண செயலிகளின் தர வரிசையில் ஆர் யூ டெட் செயலி

வீட்டில் வசிக்கும் முதியோர் மீது அதிக கவனம் செலுத்தவும், அவர்களுக்கு அதிக கவனிப்பு மற்றும் புரிதல்களை வழங்கவும் நாங்கள் அதிக மக்களை அழைக்க விரும்புகிறோம் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் இந்த செயலி டெமுமு என பட்டியலிடப்பட்டுள்ளது. இது சீனாவுக்கு வெளியே மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அமெரிக்கா, சிங்கப்பூர், ஹாங்காங், ஆஸ்திரேலிய, பெயினில் அதிக கட்டணம் செலுத்தும் பயன்பாட்டு செயலிகளில் இந்த செயலி தரவரிசையில் இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க: 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான குஷான பேரரசு நாணயம்…இரு உருவங்கள்…பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு!