Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு.. கணித ஆசிரியைக்கு கிடைத்த வாழ்நாள் தண்டனை!

Teacher Had Inappropriate Relationship With Students | இங்கிலாந்தில் உள்ள பள்ளியில் கணித ஆசிரியராக பணியற்றி வந்த பெண் ஒருவர் தனது வகுப்பு மாணவர்களை கட்டாயப்படுத்தி அவர்களுடன் பாலியல் உறவில் இருந்த நிலையில், அவருக்கு வாழ்நாள் முழுவதும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் உறவு.. கணித ஆசிரியைக்கு கிடைத்த வாழ்நாள் தண்டனை!
சிறையில் உள்ள ஆசிரியை ரபேக்கா
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Jan 2026 15:10 PM IST

லண்டன், ஜன்வரி 07 : இங்கிலாந்தின் (England) மான்செஸ்டர் (Manchester) நகரில் உள்ள ஒரு பள்ளியில், ரெபேக்கா ஜாய்ன்ஸ் என்ற 31 வயது பெண் ஒருவர் கணித அசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது வகுப்பில் பயின்ற மாணவர்களுடன் தகாத உறவில் இருந்ததாக இவர் மீது 2022 ஆம் ஆண்டு பகீர் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இதன் காரணமாக பள்ளி நிர்வாகம் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்தது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரெபேக்காவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இந்த விவகாரத்தில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2 மாணவர்களுடன் வலுக்கட்டாயமாக பாலியல் உறவு வைத்துக்கொண்ட ரெபேக்கா

மாண்வர்களுடன் தகாத உறவில் இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியை ரபேக்கா இரண்டு மணவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் உறவில் இருந்ததும், அதில் ஒரு மாணவர் மூலம் ரபேக்கா குழந்தை பெற்றுக்கொண்டதும் தெரிய வந்துள்ளது. இதனை கேட்ட நீதிபதிகள் அவருக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டிருந்தனர். 2024 ஆம் ஆண்டு அவருக்கு சுமார் 6.5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உத்தரவிடப்பட்ட நிலையில், அவர் தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.

இதையும் படிங்க : வெனிசுலா அட்டாக்.. தங்கம் விலை தாறுமாறா அதிகரிக்குமா? என்ன நடக்கபோகுது?

வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் பணியில் ஈடுபட தடை

ரபேக்காவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட போதிலும், அவர் மீதான வழக்கு குறித்து தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாணவர்களை கட்டாயப்படுத்தி அவர்களுடன் பாலியல் உறவில் இருந்த ரபேக்கா இனி தனது வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் பணியில் ஈடுபட கூடாது என தடை விதித்து காவல்துறை அவருக்கு மிக கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதையும் படிங்க : வெனிசுலாவில் அமெரிக்க நடவடிக்கைகள்.. எண்ணெய் விலைகள் மற்றும் இந்தியாவை எவ்வாறு பாதிக்கலாம்?

மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் மகத்தான ஆசிரியர் பணியில் இருந்த ரபேக்கா அதனை பயன்படுத்தி இத்தகைய கொடூரமான செயலை செய்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த தண்டனைக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது.