Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

600 கிலோ.. உலகின் அதிக எடை கொண்ட நபர் 41 வயதில் பரிதாப பலி!

Worlds Most Obese Man Died | 2017 ஆம் ஆண்டு 600 கிலோ எடையுடன் உலகின் அதிக உடல் எடை கொண்ட நபர் என்ற கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நபர் தனது 41வது வயதில் பலியானார்.

600 கிலோ.. உலகின் அதிக எடை கொண்ட நபர் 41 வயதில் பரிதாப பலி!
அதிக உடல் எடை கொண்ட நபர்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 03 Jan 2026 09:32 AM IST

மெக்சிகோ, ஜனவரி 03 : மனிதர்களுக்கு உடல் பருமன் என்பது வாழ்வியல் சிக்கலை மட்டுமன்றி, உடல்நலம் சார்ந்த பல்வேறு சிக்கல்களையும் உருவாக்குகிறது. 100 கிலோவுக்கு மேல் உடல் எடை கொண்டவர்களே தங்களது அன்றாட வாழ்வில் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொள்வர். இந்த நிலையில், 200, 300 கிலோ உடல் எடை கொண்டவர்களின் நிலை மிகவும் மோசமானது தான். அந்த வகையில், உலகின் அதிக உடல் எடை கொண்ட மனிதர் என்ற சாதனை படைத்த நபர் தற்போது உயிரிழந்துள்ளார்.

உடலின் அதிக உடல் எடை கொண்ட நபர் உயிரிழப்பு

மெக்சிகோவை (Mexico) சேர்ந்தவர் 41 வயதான ஜூவான் பெட்ரோ பிராங்கோ. இவர் 2017 ஆம் ஆண்டு சுமார் 6 டன் எடையுடன் காணப்பட்டார். அதாவது சுமார் 600 கிலோ எடை கொண்டு இருந்துள்ளார். இவ்வாறு அவர் மிகவும் அசாத்தியமான உடல் எடையை கொண்டு இருந்த நிலையில், அவர் உலகின் மிகவும் அதிக உடல் எடை கொண்ட நபர் என்ற சாதனை முலம் கின்னஸ் உலக சாதனை (Guinness World Record) புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : முற்றிய மோதல்.. வெனிசுலாவின் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்.. டிரம்ப் பரபரப்பு தகவல்!

உடல் பருமன் காரணமாக உடல்நல சிக்கல்களால் தவித்த பிராங்கோ

அதிக உடல் பருமன் காரணமாக அவரால் தனது கை, கால்களை அசைக்க முடியாமலும், படுக்கையை விட்டு எழுந்திரிக்க முடியாமலும் இருந்துள்ளது. இதுதவிர சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், தைராய்டு உள்ளிட்ட நோய்களும் அவரை வாட்டி வதைத்து வந்துள்ளன. இவ்வாறு மிக கடுமையான உடல்நல சிக்கல்களை கொண்டு இருந்த அவர், ஜோஸ் அன்டோனியோ காஸ்டானெடா என்ற மருத்துவரின் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இதையும் படிங்க் : ரஷ்ய அதிபர் புதின் வீட்டின் மீது டிரோன் தாக்குதல் நடத்த உக்ரைன் முயற்சி.. ரஷ்யா பரபரப்பு குற்றச்சாட்டு!

இந்த நிலையில், அவர் கடந்த சில நாட்களாக மிக கடுமையான சிறுநீரக தொற்றால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்காக அவர் மருத்துவமனையில் தீவிர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், டிசம்பர் 24, 2025 அன்று அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.