AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தீர்த்தத்தின் அதிசயம்: சடங்குகளில் தண்ணீரின் முக்கியத்துவம் என்ன?

Water Rituals and Their Scientific Significance: தண்ணீர் ஆன்மிக வழிபாடுகளில் முக்கிய இடம் பெறுகிறது. சிவன் கோயில்களில் அபிஷேகம் முக்கிய சடங்காகும். தண்ணீரின் ஒலி மனஅழுத்தத்தை குறைக்கிறது. அதிக தண்ணீர் குடிப்பது உடல் நலத்தை மேம்படுத்துகிறது. நாட்டுப்புறங்களில் தீர்த்தம் மருத்துவ நம்பிக்கையுடன் உள்ளது. சமூக உறவுகளை இணைக்கும் சின்னமாக தண்ணீர் விளங்குகிறது.

தீர்த்தத்தின் அதிசயம்: சடங்குகளில் தண்ணீரின் முக்கியத்துவம் என்ன?
சிவன் கோயில்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 03 Mar 2026 16:03 PM IST

தண்ணீர் மனித வாழ்வின் அடிப்படை ஆதாரமாக மட்டுமல்லாமல், ஆன்மிக மற்றும் சமய வழிபாடுகளிலும் முக்கிய பங்காற்றி வருகிறது. பௌத்தர்கள் நல்ல நீர் நிலைகளின் அருகே மடங்கள் அல்லது சங்கங்களை அமைத்து, அங்கு மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் மருத்துவ சேவைகளை வழங்கினர். காலப்போக்கில் அந்த மடங்கள் விகாரைகளாக மாறி வழிபாட்டு மையங்களாக வளர்ச்சி பெற்றன. இதன் மூலம் தண்ணீர் மற்றும் ஆன்மிகம் ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்திருப்பது தெளிவாகிறது.

இதேபோல் இந்து சமயத்தில், குறிப்பாக சிவ வழிபாட்டில் தண்ணீர் மிகுந்த புனிதத்துடன் கருதப்படுகிறது. திருக்கோயில்களில் நடைபெறும் திருமுழுக்கு அல்லது கும்பாபிஷேக விழாக்களில் புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்படும் தீர்த்தம் கோபுரக் கலசங்களில் ஊற்றப்படுகிறது. தினசரி மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்படும் வழக்கமும் நிலவுகிறது. சிவனுக்கு “அபிஷேகப் பிரியன்” என்ற சிறப்புப் பெயர் வழங்கப்படுவதும் இதன் அடையாளமாகும். ஆனி மாதத்தில் நடராஜ பெருமானுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தண்ணீரின் அறிவியல் உண்மைகள்

தண்ணீரை மையமாகக் கொண்ட சடங்குகள் அறிவியல் ரீதியாகவும் வியப்பூட்டுகின்றன. தண்ணீர் கொட்டுவதைப் பார்ப்பதும் அதன் ஓசையைக் கேட்பதும் மூளைக்கு அதிக ரத்த ஓட்டத்தை ஏற்படுத்தி மனஅழுத்தத்தை குறைக்கிறது. இது உடல் சோர்வை நீக்கி நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது. மேலும், தண்ணீர் உடலில் நியூரோ கெமிக்கல் சுரப்பை தூண்டி நரம்புகளின் செயல்திறனை மேம்படுத்துகிறது.

தண்ணீரை அதிகமாக குடிப்பது உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றுகிறது. உயிரணுக்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டு செல்ல உதவுகிறது. உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தி PH சமநிலையை தக்க வைத்திருக்க உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் வளர்சிதை மாற்ற செயல்களை ஊக்குவிப்பதிலும் தண்ணீர் முக்கிய பங்கு வகிக்கிறது.

அருவிகள் அருகே இருப்பது அல்லது தண்ணீரின் ஒலியைக் கேட்பது பேராசிம்பதெடிக் நரம்பு மண்டலத்தைச் செயல்படுத்தி மன அமைதியை அளிக்கிறது. இதனால் தான் குற்றால அருவி போன்ற இடங்களில் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை குளிக்கச் செய்து சிகிச்சை அளிக்கும் பழக்கம் நிலவுகிறது.

தண்ணீரின் மருத்துவ மற்றும் மந்திர சக்தி

நாட்டுப்புறங்களில் தண்ணீருக்கு மருத்துவ மற்றும் மந்திர சக்தி உண்டு என்ற நம்பிக்கை பரவலாக உள்ளது. விஷக் கடிக்கு தீர்த்தம் கொடுப்பது, கோயிலில் தீர்த்தம் வாங்கி பருகுவது போன்ற வழக்கங்கள் இன்னும் நடைமுறையில் உள்ளன. குடும்பத் தகராறுகளைத் தீர்க்க செம்புத் தண்ணீர் கொடுத்து மீண்டும் இணையும் மரபும் காணப்படுகிறது. இவை அனைத்தும் தண்ணீர் சமூக ஒற்றுமைக்கும் மனநலத்திற்கும் ஆதாரமாக இருப்பதை வெளிப்படுத்துகின்றன.

Also Read: மஞ்சள் மழையில் நனையும் சிவன்: எங்கே இருக்கிறது இந்த கோயில்?

தண்ணீரின் சமூகச் செயல்பாடுகள்

1962ஆம் ஆண்டு அறிஞர் பிளாக்மன் தண்ணீர் சடங்குகளை மந்திர மற்றும் சமய பயன்பாடுகளாக இரு வகைகளாக வகைப்படுத்தினார். மேலும், தண்ணீர் மூலம் ‘பிரித்தல்’, ‘மாற்றுதல்’, ‘இணைத்தல்’ என்ற மூன்று சமூக செயல்பாடுகள் நடைபெறுகின்றன என கூறப்படுகிறது.

பிரித்தல் என்பது ஒருவரை உறவிலிருந்து விலக்குதல்; இதனை ‘கை கழுவிவிடுதல்’ என சொல்வர். மாற்றுதல் என்பது ஒரு மரபிலிருந்து மற்றொரு மரபிற்கு மாறுதல்; இதனை ‘மடைமாற்றம்’ என அழைப்பர். இணைத்தல் என்பது செம்புத் தண்ணீர் கொடுத்து குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைத்தல் ஆகும்.

இவ்வாறு தண்ணீர் ஆன்மிகம், அறிவியல், மருத்துவம் மற்றும் சமூக வாழ்க்கை ஆகிய அனைத்திலும் ஆழமாகப் பதிந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.

Follow Us