AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வானிலை மாற்றம்: மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மழை வாய்ப்பு

Dry Weather to Persist Across Tamil Nadu: தமிழகம், புதுவை, காரைக்காலில் வறண்ட வானிலை தொடர்கிறது. கரூர் பரமத்தியில் 37.5°C அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியது. கொடைக்கானலில் 7.2°C குறைந்தபட்ச வெப்பநிலை காணப்பட்டது. 2026 மார்ச் 07 முதல் 09ம் தேதி வரை சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

வானிலை மாற்றம்: மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மழை வாய்ப்பு
மேற்குத் தொடர்ச்சி மலைக்கு மழை வாய்ப்புImage Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 03 Mar 2026 16:36 PM IST

தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நீடிப்பு

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை அறிக்கை வெளியாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக குறிப்பிடத்தக்க மாற்றம் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து 2° செல்சியஸ் வரை உயர்ந்தும், ஏனைய பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருந்தது. அதேபோல் குறைந்தபட்ச வெப்பநிலையிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை. சில இடங்களில் இயல்பிலிருந்து 2° செல்சியஸ் வரை குறைந்துள்ள நிலையில், மற்ற பகுதிகளில் இயல்பை ஒட்டியே இருந்தது.

அதிகபட்ச வெப்பநிலை கரூர் பரமத்தியில் 37.5° செல்சியஸ் பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் திருத்தணியில் 18.5° செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை பதிவானது. மலைப்பகுதிகளில் கொடைக்கானலில் 7.2° செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை காணப்பட்டது.

வளிமண்டல சுழற்சி நிலை

மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மத்திய வங்கக்கடல் மற்றும் பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக 03-03-2026 முதல் 06-03-2026 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

07-03-2026 முதல் 09-03-2026 வரை மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை தொடரும்.

பனிமூட்டம் மற்றும் வெப்பநிலை முன்னறிவிப்பு

04-03-2026 மற்றும் 05-03-2026 தேதிகளில் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் அதிகாலை நேரங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 06-03-2026 முதல் 07-03-2026 வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும். 05-03-2026 முதல் 07-03-2026 வரை சில இடங்களில் இயல்பை விட 2–3° செல்சியஸ் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும், சில இடங்களில் 2° செல்சியஸ் வரை குறையக்கூடும். மற்ற பகுதிகளில் இயல்பை ஒட்டி இருக்கும்.

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் மிதமான பனிமூட்டம் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 33–34° செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22–23° செல்சியஸ் அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கு அறிவுரை

03-03-2026 முதல் 07-03-2026 வரை தமிழக கடலோரம், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் எச்சரிக்கை ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

Follow Us