AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நடுவானில் விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறல்.. மது போதையில் திமுக கவுன்சிலர்-வக்கீலின் ஒழுங்கீன செயல்!

D M K Councillor And Lawyer Arrested : சென்னையில் இருந்து டெல்லி சென்ற இண்டிகோ விமானத்தில் பணிப் பெண்ணுக்கு மது போதையில் பாலியல் தொல்லை அளித்ததாக திமுக கவுன்சிலர் மற்றும் அவரது நண்பரை மகளிர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

நடுவானில் விமான பணிப்பெண்ணிடம் அத்துமீறல்.. மது போதையில் திமுக கவுன்சிலர்-வக்கீலின் ஒழுங்கீன செயல்!
விமான பணி பெண்ணிடம் அத்துமீறிய திமுக கவுன்சில், வக்கீல் கைது
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 03 Mar 2026 17:23 PM IST

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து டெல்லி விமான நிலையத்திற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடந்த பிப்ரவரி 25- ஆம் தேதி ( புதன்கிழமை ) புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் திருவள்ளூர் நகராட்சியின் திராவி முன்னேற்றக் கழகத்தின் கவுன்சிலரான பிரபாகரன் மற்றும் அவரது நண்பரும், வழக்கறிஞருமான தியாகு ஆகியோர் பயணம் செய்தனர். இந்த பயணத்தின் போது, இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது, விமானத்தில் பணியில் இருந்த பணி பெண்ணை கையை காண்பித்து அழைத்து ஊர் பெயரை கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பெண்ணின் ஊர் பெயரை கூறி கேலி செய்ததுடன், ஒரு கட்டத்தில் அந்த பெண் மீது கை வைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த அந்த பணி பெண் இதுகுறித்து தனது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

முறையான விசாரணைக்கு ஆஜராககோரி சம்மன்

இதைத் தொடர்ந்து, சென்னை மீனம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்திலும் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து பிரபாகரன் மற்றும் தியாகு ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, அவர்களை பிப்ரவரி 26- ஆம் தேதி முறையான விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கூறி அனுப்பி வைத்தனர். மேலும், அவர்கள் இருவருக்கும் போலீசார் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: நெல்லையில் பயங்கரம்.. போதை கும்பல் வெறியாட்டம்.. ஓட ஓட அரிவாள் வெட்டு.. இருவர் பலி..

தலைமறைவாக இருந்து வந்த திமுக கவுன்சிலர்- வழக்கறிஞர்

ஆனால், அவர்கள் இருவரும் விசாரணைக்கு ஆஜராகாமல், தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் சந்தேகம் அடைந்த மீனம்பாக்கம் மகளிர் போலீசார் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததுடன் அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று திங்கள்கிழமை ( மார்ச் 2) டெல்லியில் இருந்து விமான மூலம் பிரபாகரன் மற்றும் தியாகு ஆகியோர் சென்னை வந்தனர்.

விமான நிலையத்தில் சுற்றி வளைத்து கைது செய்த போலீசார்

இது குறித்து முன்கூட்டியே தகவல் அறிந்த போலீசார் சென்னை விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்த வழக்கறிஞர் தியாகு மற்றும் தி. மு. க கவுன்சிலர் பிரபாகரன் ஆகியோரை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியதுடன், நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சின்னம்மை நோய் பரவல்.. பொது மக்களுக்கு சுகாதார துறை அறிவுறுத்தல்..

Follow Us