AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிக்கு தொல்லை கொடுத்த இளைஞர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!

Youngsters Followed Foreign Woman YouTuber | வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு ஏராளமானவர்கள் சுற்றுலா வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண் யூடியூபரை இளைஞர்கள் பின் தொடர்ந்து தொல்லை கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணிக்கு தொல்லை கொடுத்த இளைஞர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!
தொல்லை கொடுத்த இளைஞர்கள்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Feb 2026 14:32 PM IST

மும்பை, பிப்ரவரி 28 : வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் பலர் இந்தியாவுக்கு தனியாக சுற்றுலா வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் வெளிநாட்டு பெண் ஒருவர் மும்பையை (Mumbai) சுற்றிப் பார்த்துக்கொண்டு இருந்தபோது அவரை இரண்டு இளைஞர்கள் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ மிக வேகமாக வைரலாகி வரும் நிலையில், இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு தொல்லை கொடுத்த இளைஞர்கள்

பரந்து விரிந்த இந்த உலகத்தை சுற்றிப் பார்க்க வேண்டும் என்பது பலரது ஆசையாக இருக்கும். குறிப்பாக வெளிநாட்டவர்கள் பலர் உலக நாடுகளுக்கு பயணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு பலர் இந்தியாவுக்கு சுற்றுலா வருவர். அவர்கள் தங்களது பயண அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்து யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடக செயலிகளில் பதிவிடுவர். அந்த வகையில் இந்தியாவுக்கு வந்த வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணியின் வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : தந்தையை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய மகன்.. பகீர் வாக்குமூலம்!

பெண் சுற்றுலா பயணியை பின்தொடர்ந்து தொல்லை கொடுத்த இளைஞர்கள்

வெளிநாட்டை சேர்ந்த பெண் யூடியூபர் இனிஸ் பரியா, இரண்டு மாதங்களாக இந்தியாவில் சுற்றுலா மேற்கொண்டு வருகிறார். அவ்வாறு அவர் பயணம் செய்வதை தொடர்ந்து தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மகாராஷ்டிராவில் (Maharashtra) சுற்றுப்பயணம் செய்துக்கொண்டு இருந்துள்ளார். அவர் மும்பையில் சாலையில் நடந்துச் சென்றுக்கொண்டு இருந்தபோது அவரை இரண்டு இளைஞர்கள் பின்தொடர்ந்துள்ளனர்.

இதையும் படிங்க : திருமண வரவேற்பில் மணமகளை துப்பாக்கியால் சுட்ட நபர்.. காதல் விவகாரத்தில் கொடூர செயல்!

அவர்கள் அந்த பெண்ணிடம் புகைப்படம் எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அந்த பெண் புகைப்படம் எடுக்க மறுத்தும் அவர்கள் விடாமல் பின்தொடர்ந்து சென்றுள்ளனர். அப்போது அவர் பதிவு செய்த வீடியோவை யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், அது தற்போது வைரலாகி வருகிறது. அந்த இளைஞர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகளும் எழுந்து வருகின்றன.

Follow Us