வெனிசுலாவில் அமெரிக்க நடவடிக்கைகள்.. எண்ணெய் விலைகள் மற்றும் இந்தியாவை எவ்வாறு பாதிக்கலாம்?
Venezuela Issue: சனிக்கிழமை Fox News-க்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்கா மிக வலுவாக ஈடுபடும்” என தெரிவித்தார்.மேலும், உலகிலேயே மிகப்பெரிய மற்றும் சிறந்த எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவையே எனக் குறிப்பிட்ட டிரம்ப், வெனிசுலா எண்ணெய் துறையில் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறினார்.
ஜனவரி 4, 2025: வெனிசுலாவில் ஆட்சி மாற்றத்தை நோக்கமாகக் கொண்ட இராணுவ நடவடிக்கையின் போது, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்கா “கைப்பற்றியதாக” அறிவித்ததைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலைகள் உலகளவில் கவனத்தில் உள்ளன. இந்த நடவடிக்கை, உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் இடையூறு ஏற்படும் என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது. உலகிலேயே மிகப்பெரிய உறுதியான கச்சா எண்ணெய் களஞ்சியங்களை கொண்ட நாடுகளில் ஒன்றாக வெனிசுலா திகழ்ந்தாலும்,
கடந்த பல ஆண்டுகளாக அமெரிக்கா விதித்துள்ள தடைகள் காரணமாக அந்நாட்டின் எண்ணெய் ஏற்றுமதி குறைந்த நிலையில் தான் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தற்போதைக்கு சர்வதேச எண்ணெய் விலைகள் பெரிதாக உயராமல், ஒரு பேரல் 60 டாலர் அளவில் நிலவி வருகின்றன.
மேலும் படிக்க: இந்து போலீஸ் அதிகாரியை எரித்துக்கொன்றேன்… பெருமையாக பேசும் வங்கதேச இளைஞர் – வைரல் வீடியோ
வெனிசுலா எண்ணெய் துறையில் அமெரிக்காவின் பங்கு:
சனிக்கிழமை Fox News-க்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “வெனிசுலாவின் எண்ணெய் துறையில் அமெரிக்கா மிக வலுவாக ஈடுபடும்” என தெரிவித்தார்.மேலும், உலகிலேயே மிகப்பெரிய மற்றும் சிறந்த எண்ணெய் நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவையே எனக் குறிப்பிட்ட டிரம்ப், வெனிசுலா எண்ணெய் துறையில் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்கள் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறினார்.
உலகின் மிகுந்த எண்ணெய் வளம் கொண்ட நாடுகளில் ஒன்றான வெனிசுலாவில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக, எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள போதிலும், எண்ணெய் விலைகள் தற்போது சிறிய சரிவுடன் 60 டாலர் அளவில் தான் நிலவி வருகின்றன.
மேலும் படிக்க: இனி கிரீன் கார்டு பெற அமெரிக்கரை திருமணம் செய்தால் மட்டும் போதாது.. டிரம்ப் நிர்வாகத்தின் ஸ்ட்ரிக்ட் ரூல்ஸ்!
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, வெனிசுலாவின் அரசு கட்டுப்பாட்டிலுள்ள எண்ணெய் நிறுவனம் PDVSA, சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “எண்ணெய் உற்பத்தி மற்றும் சுத்திகரிப்பு பணிகள் வழக்கம்போல நடைபெற்று வருகின்றன. முக்கிய எண்ணெய் உள்கட்டமைப்பு அமைப்புகள் எதுவும் அமெரிக்க தாக்குதலால் சேதமடையவில்லை” என தெரிவித்துள்ளது.
ஆனால், தலைநகர் கராக்காஸ் அருகே உள்ள லா குவைரா துறைமுகம் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும், இருப்பினும் அந்த துறைமுகம் எண்ணெய் ஏற்றுமதிக்காக பயன்படுத்தப்படுவதில்லை என்றும் ராய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
வெனிசுலா எண்ணெய் உற்பத்தி: ஏற்றத் தாழ்வுகள்
சர்வதேச எரிசக்தி முகமை (IEA) மற்றும் Trading Economics தரவுகளின்படி:
- 2020-ஆம் ஆண்டு, வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தி வரலாற்றிலேயே மிகக் குறைந்த நிலைக்கு சரிந்தது
- ஆண்டு உற்பத்தி: 192 மில்லியன் பேரல்கள்
- 2021-இல், தினசரி உற்பத்தி 5.5 லட்சம் முதல் 6.3 லட்சம் பேரல்கள் வரை மீண்டது
- 2022-இல்: 217 மில்லியன் பேரல்கள்
- 2023-இல்: 264 மில்லியன் பேரல்கள்
இது, ஈரானுடன் செய்யப்பட்ட diluent swaps மற்றும் அமெரிக்காவின் General License 44 மூலம் விதிக்கப்பட்ட தடைகள் தளர்த்தப்பட்டதன் காரணமாக ஏற்பட்ட முன்னேற்றமாகும்.
வெனிசுலா விவகாரம் இந்தியாவை எப்படி பாதிக்கும்?
இந்த அரசியல் மாற்றங்கள் இந்தியாவிற்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை. வெனிசுலா எண்ணெயின் மிகப்பெரிய வாங்குபவர் சீனா. இந்தியா முன்பு வெனிசுலாவிலிருந்து பெருமளவில் எண்ணெய் இறக்குமதி செய்தது. ஆனால், 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில், அமெரிக்க தடைகள் காரணமாக இந்தியாவின் இறக்குமதி கிட்டத்தட்ட பூஜ்யமாகியது. 2023–24-ஆம் ஆண்டில், இந்தியாவின் வெனிசுலா எண்ணெய் இறக்குமதி மீண்டும் அதிகரித்து, 2024-இல், இந்தியாவின் சராசரி இறக்குமதி தினசரி 63,000 – 1,00,000 பேரல்கள் ஆகும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 500% உயர்வு
2025-இல் பெரும்பாலான காலகட்டத்தில், சீனா மற்றும் அமெரிக்காவுக்குப் பிறகு வெனிசுலா எண்ணெயின் மூன்றாவது பெரிய வாங்குபவராக இந்தியா இருந்தது ஆனால், ஆண்டின் இறுதிப் பகுதியில், புவியியல் அரசியல் பதற்றம் மீண்டும் கடுமையாக்கப்பட்ட அமெரிக்க தடைகள் ஆகிய காரணங்களால் இந்தியாவின் எண்ணெய் இறக்குமதி குறையத் தொடங்கியது.