இந்து போலீஸ் அதிகாரியை எரித்துக்கொன்றேன்… பெருமையாக பேசும் வங்கதேச இளைஞர் – வைரல் வீடியோ
Bangladesh Viral Video: வங்கதேசத்தில் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதனை மேலும் உறுதி செய்யும் அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், காவல் நிலையத்திற்குள் நுழைந்த மாணவர் அமைப்பு தலைவர்கள், போலீசாரை நேரடியாக மிரட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
வங்கதேசத்தில் (Bangladesh) சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதனை மேலும் உறுதி செய்யும் அதிர்ச்சி வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், காவல் நிலையத்திற்குள் நுழைந்த மாணவர் அமைப்பு தலைவர்கள், போலீசாரை நேரடியாக மிரட்டி பேசுவதோடு, ஒரு காவல் நிலையத்திற்கு தீ வைத்ததும், இந்து காவல் அதிகாரியை உயிரோடு எரித்துக் கொன்றதாகவும் பெருமையாக பேசுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம், வங்கதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள ஹபிகஞ்ச் மாவட்டத்தில் உள்ள ஷயேஸ்தகஞ்ச் காவல் நிலையத்தில், கடந்த ஜனவரி 2, 2026 அன்று பிற்பகல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அங்கு, ஆன்டி டிஸ்கிரிமினேஷன் ஸ்டூடன்ட் மூவ்மெண்ட் என்ற அமைப்பைச் சேர்ந்த தலைவர்கள், காவல் நிலையத்திற்குள் சென்று, போலீஸ் அதிகாரிகளை கடுமையாக தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தடை செய்யப்பட்ட சத்ரா லீக் அமைப்பின் முன்னாள் தலைவர் எனாமுல் ஹசன் நயன் என்பவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது.
இதையும் படிக்க : புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து -40க்கும் மேற்பட்டோர் பலி – ஸ்விட்சர்லாந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
வைரலாகும் வீடியோ
The boy is a student coordinator from Habiganj district.
He is openly threatening the Officer-in-Charge of a police station, saying he will burn the station down.
He even boasts that during the July movement they had already set the Baniachong police station on fire.
He goes even… pic.twitter.com/CNzirf99Vg— Sahidul Hasan Khokon (@SahidulKhokonbd) January 2, 2026
இந்த மாணவர் இயக்கம், 2024ஆம் ஆண்டு பிரதமர் ஷேக் ஹசினா தலைமையிலான அரசை வீழ்த்திய போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. அதன்பின் அமைந்த இடைக்கால நிர்வாகத்தை முகமது யூனஸ் வழிநடத்தி வருகிறார். இந்த நிலையில் வைரலான வீடியோவில், ஹபிகஞ்ச் மாவட்டத்தில் மக்தி ஹசன், நாங்கள்தான் இந்த அரசை உருவாக்கினோம். ஆனால் எங்கள் ஆட்களை நீங்கள் கைது செய்கிறீர்கள் என்கிறார். மேலும், 2024 ஆகஸ்ட் மாதத்தில் நடந்த வன்முறைகளை நினைவூட்டுகிறார். அப்போது பனியாசங் காவல் நிலையத்திற்கு தீ வைத்ததாகவும், அங்கு பணியாற்றிய துணை ஆய்வாளர் சந்தோஷ் சவுத்ரி என்பவரை உயிரோடு எரித்துக் கொன்றதாகவும் வெளிப்படையாக பேசுகிறார்.
அவரது பேச்சு, ஒரு வகையில் கொலையை ஒப்புக்கொள்ளும் வாக்குமூலமாகவே பார்க்கப்படுகின்றன. ஆனால், அதைவிட அதிர்ச்சியளிப்பது, இவ்வளவு கடுமையான குற்றங்களைப் பற்றி பெருமையாக பேசும் அவர், எந்த பயமும் இன்றி காவல் நிலையத்திற்குள் உட்கார்ந்து போலீசாரையே மிரட்டுவது தான் என சமூக வலைதளங்களில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இதையும் படிக்க : முற்றிய மோதல்.. வெனிசுலாவின் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்.. டிரம்ப் பரபரப்பு தகவல்!
உயிரிழந்த துணை ஆய்வாளர் சந்தோஷ் சவுத்ரி, 2024 ஆகஸ்ட் 5 ஆம் தேதி பனியாசங் காவல் நிலையத்தில் நடந்த ன்முறையின் போது கொல்லப்பட்டார். அவரது உடல் பின்னர் ஒரு மரத்தில் தொங்கவிடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. அதே நாளில் தான் ஷேக் ஹசீனா நாடு விட்டு வெளியேறினார். அதனைத் தொடர்ந்து, வங்க தேசம் முழுவதும் வன்முறை, கொள்ளை மற்றும் அந்நாட்டின் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல்கள் அதிகரித்ததாக கூறப்படுகிறது.
(Disclaimer: இந்த வீடியோவின் நம்பகத்தன்மை, பேசுபவரின் அடையாளம் அல்லது அதில் கூறப்பட்டுள்ள கூற்றுகள் ஆகியவற்றை டிவி9 தமிழ் தனிப்பட்ட முறையில் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. )