Women World Cup Points Table: இந்தியாவை முந்திய வங்கதேசம்.. மகளிர் உலகக் கோப்பை புள்ளிகள் பட்டியலில் ஆஸ்திரேலியா டாப்!
ICC Women's World Cup 2025: 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா, வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா என 3 அணிகள் வெற்றியும், 3 அணிகள் தோல்வியும் சந்தித்துள்ளன. ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் இந்தியா அணிகள் தலா 2 புள்ளிகளைப் பெற்றுள்ளன.

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை (2025 Women World Cup) போட்டியானது இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் போட்டிகள் மட்டுமே இலங்கையில் நடைபெறும் நிலையில், இந்தியா (Indian Womens Cricket Team) உள்ளிட்ட மற்ற அணிகளின் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் உள்ள வெவ்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. 2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் முதல் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணியும் இலங்கை மகளிர் அணியை தோற்கடித்தது. அதைத் தொடர்ந்து, மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை வீழ்த்தி தனது முதல் போட்டியில் வெற்றியை கண்டது. அதேநேரத்தில், மூன்றாவது போட்டி நேற்று அதாவது 2025 அக்டோபர் 2ம் தேதி வங்கதேசம் – பாகிஸ்தான் அணிகள் மோதியது. இந்த போட்டியில், வங்கதேசம் பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ALSO READ: இந்திய மகளிர் அணியும் பாகிஸ்தான் வீராங்கனைகளுடன் கைக்குலுக்காது.. தடை போட்ட பிசிசிஐ..?




அதேநேரத்தில், இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிக்கும் தென்னாப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான போட்டி இன்று அதாவது 2025 அக்டோபர் 3ம் தேதி நடைபெறுகிறது. இப்படியான சூழ்நிலையில், 3 போட்டிகளுக்கு பிறகு புள்ளிகள் பட்டியலில் ஒவ்வொரு அணியும் தற்போது எந்த இடத்தில் உள்ளது என்பதை பார்ப்போம்.
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை புள்ளிகள் பட்டியல்:
BAN W has beaten PAK W by 7 wickets with 19 overs to bowl in their ist WC match of the #WomensWorldCup2025 ..Bangladesh chased down the target quite easily #PAKWvsBANW https://t.co/hT6Ua7jbdN pic.twitter.com/MOQTbaeXDy
— Cover Drive (@day6596) October 2, 2025
2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இதில், இந்தியா, ஆஸ்திரேலியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட 6 அணிகள் ஏற்கனவே தங்கள் முதல் போட்டிகளை விளையாடியுள்ளன. இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா 2025 அக்டோபர் 3ம் தேதியான இன்று போட்டியின் தொடக்க ஆட்டங்களில் விளையாட இருக்கிறது. இதன் விளைவாக, இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா தற்போது புள்ளிகள் பட்டியலில் முறையே ஏழாவது மற்றும் எட்டாவது இடத்தில் உள்ளன.
ALSO READ: ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் குறித்து கருத்து.. வசமாக மாட்டிய முன்னாள் கேப்டன்!
இந்திய அணி 3வது இடம்:
2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இதுவரை இந்தியா, வங்கதேசம் மற்றும் ஆஸ்திரேலியா என 3 அணிகள் வெற்றியும், 3 அணிகள் தோல்வியும் சந்தித்துள்ளன. ஆஸ்திரேலியா, வங்கதேசம் மற்றும் இந்தியா அணிகள் தலா 2 புள்ளிகளைப் பெற்றுள்ளன. +1.780 என்ற நிகர ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் உள்ளது. வங்கதேச அணி +1.623 என்ற ரன் ரேட்டுடன் 2வது இடத்தில் உள்ளது. அதேநேரத்தில், இந்திய அணி +1.255 நிகர ரன் ரேட்டுடன் 3வது இடத்தில் உள்ளது. வங்கதேச அணி பாகிஸ்தானை வீழ்த்தி அசத்தியது. வங்கதேசம் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணியை 129 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது. பின்னர், இந்த இலக்கை துரத்திய வங்கதேச அணி 32வது ஓவரில் இலக்கை அடைந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பதிவு செய்தது. இதன்மூலம், புள்ளிகள் பட்டியலில் வங்கதேசம் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.