Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் குறித்து கருத்து.. வசமாக மாட்டிய முன்னாள் கேப்டன்!

ICC Women's World Cup: 2025 மகளிர் உலகக்கோப்பை வர்ணனையின் போது பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் சனா மிர், நடாலியா பெர்வைஸை ‘ஆசாத் காஷ்மீர்’ பகுதியினர் எனக் குறிப்பிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. கண்டனங்கள் எழுந்த நிலையில், சனா மிர் தன்னிலை விளக்கம் அளித்துள்ளார்..

ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் குறித்து கருத்து.. வசமாக மாட்டிய முன்னாள் கேப்டன்!
ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் கருத்து.. சிக்கலில் முன்னாள் கேப்டன்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 03 Oct 2025 09:46 AM IST

2025 மகளிர் உலகக்கோப்பை போட்டியின் போது சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான்  அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் விளக்கம் கொடுத்துள்ளார். ஐசிசி மகளிர் உலகக்கோப்பை 50 ஓவர் தொடர் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி தொடங்கி நவம்பர் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனிடையே கொழும்பில் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டியின் போது, ​​வர்ணனையாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சனா மிர் பணியாற்றினார். அப்போது தற்போதைய பாகிஸ்தான் வீரர் நடாலியா பெர்வைஸ் பேட்டிங் செய்ய வந்த போது, ​​சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்தினார். 39 வயதான நடாலியா ‘ஆசாத் காஷ்மீர்’ (சுதந்திரமான காஷ்மீர்) பகுதியைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு பேசினார்.இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சனா மிர் பயன்படுத்திய வார்த்தையான ஆசாத் காஷ்மீர் இந்தியா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.

குவிந்த கண்டனம்

சனா மிரின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். விளையாட்டில் அரசியலை சேர்க்க வேண்டாம் என பலரும் சனா மிர்க்கு வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில் அவர் தன்னிலை விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

தன்னிலை விளக்கம் கொடுத்த சனா மிர் 

அதாவது சனா மிர் தனது வர்ணனையின்போது முதலில் நடாலியாவை காஷ்மீரைச் சேர்ந்தவர் என குறிப்பிட்டு, பின்னர் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என சொல்வதற்கு பதில் சுதந்திரமான காஷ்மீர் என கூறினார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தி பதிவு ஒன்றை வெளியிட்ட சனா மிர், “தான் வளர்ந்த பகுதி காரணமாக நடாலியா சந்தித்த போராட்டங்களை மட்டுமே வர்ணனையின்போது முன்னிலைப்படுத்த விரும்பியதாகக் கூறினார். தனது இதயத்தில் எந்த வித எதிர்மறையான எண்ணமும் இல்லை. அதனால் இந்தப் பிரச்சினையை அரசியல் மயமாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். மேலும் யார் உணர்வுகளையும் புண்படுத்தும் நோக்கமும் தனக்கு இல்லை” எனவும் தெரிவித்துள்ளார்.

சாதாரணமாக கூறப்படும் விஷயங்கள் எப்படி பெரிதாக்கப்படுகின்றன என்பதும், விளையாட்டுத் துறையில் உள்ளவர்கள் தேவையற்ற அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள் என்பதும் துரதிர்ஷ்டவசமானது. இதற்கு பொது இடத்தில் விளக்கம் தேவைப்படுவது வருத்தமளிக்கிறது. ஒரு பாகிஸ்தான் வீராங்கனையின் சொந்த ஊர் பற்றிய எனது கருத்து, பாகிஸ்தானின் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்திலிருந்து வருவதில் அவர் எதிர்கொண்ட சவால்களையும் அவரது நம்பமுடியாத பயணத்தையும் எடுத்துக்காட்டுவதற்காக மட்டுமே கூறப்பட்டது.

அது வர்ணனையாளர்களாக நாங்கள் செய்யும் கதை சொல்லலின் ஒரு பகுதியாகும் என அவர் சில ஸ்கிரீன் ஷாட்டுகளையும் இணைத்துள்ளார்.