T20 WC வெற்றி.. “மகிழ்ச்சியால் நிறைந்த இந்தியர் இதயம்”.. இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!
India win the T20 World Cup: மிக முக்கியமான கடைசி மூன்று போட்டிகளில், நம்ம 'சேட்டன்' சஞ்சு சாம்சன் அவ்வளவு நிதானத்துடனும் ஆளுமையுடனும் பேட்டிங் செய்ததைக் காண்பது மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அணியின் வெற்றிக்குத் தேவைப்பட்ட நேரத்தில் அவர் தனது பங்களிப்பை மிகச் சரியாக வழங்கியதாக முதல்வர் புகழாரம்.
3வது முறையாக டி20 உலக கோப்பையை (2026 T20 World Cup) வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு தலைவர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நேற்று அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இந்திய அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 255 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் நியூசிலாந்து அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிக்கொடுத்த அந்த அணி, 19 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனால் 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதோடு, டி20ல் 3வது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
இதையும் படிக்க: கோப்பையுடன் வந்த தோனி, ரோஹித்.. அதிர்ந்த ஸ்டேடியம்! ஐசிசி சிறப்பு கௌரவம்..!
இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து:
Champions!
Congratulations to the Indian team on winning the ICC Men’s T20 World Cup!
This remarkable triumph reflects exceptional skills, determination and teamwork. They have shown outstanding grit through the tournament.
This victory has filled every Indian heart with…
— Narendra Modi (@narendramodi) March 8, 2026
இந்த நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது, “ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு மனமார்ந்த பாராட்டுகள். இந்த மகத்தான வெற்றி உங்கள் அபாரமான திறமை, உறுதிப்பாடு மற்றும் கூட்டு முயற்சியின் பிரதிபலிப்பாகும்.
இந்தத் தொடர் முழுவதும் இந்திய வீரர்கள் மிகச்சிறந்த மனவலிமையை வெளிப்படுத்தியுள்ளனர். இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியரின் இதயத்தையும் பெருமையாலும் மகிழ்ச்சியாலும் நிறைத்துள்ளது. வாழ்த்துகள், டீம் இந்தியா” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
உற்சாகம் தந்த ‘சேட்டன்’ சஞ்சு சாம்சன்:
Congratulations to #TeamIndia on a flamboyant triumph in the ICC Men’s T20 World Cup.
It was exhilarating to watch Chettan @IamSanjuSamson bat with such authority and composure in the last three matches, delivering when it mattered the most.
My best wishes to all the players… pic.twitter.com/Qsximzo3QU
— M.K.Stalin – தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 8, 2026
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையில் பிரம்மாண்டமான வெற்றியைப் பதிவு செய்துள்ள இந்திய அணிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிக முக்கியமான கடைசி மூன்று போட்டிகளில், நம்ம ‘சேட்டன்’ சஞ்சு சாம்சன் அவ்வளவு நிதானத்துடனும் ஆளுமையுடனும் பேட்டிங் செய்ததைக் காண்பது மிகுந்த உற்சாகத்தை அளித்தது. அணியின் வெற்றிக்குத் தேவைப்பட்ட நேரத்தில் அவர் தனது பங்களிப்பை மிகச் சரியாக வழங்கினார்.
இந்தத் தொடர் முழுவதும் தங்களின் சீரான ஆட்டத்திறன் மூலம் இந்தியாவை ஒரு வலுவான வெற்றிக்கு இட்டுச் சென்று, மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை (#T20WorldCup) ஏந்தச் செய்த அனைத்து வீரர்களுக்கும் எனது நல்வாழ்த்துகள் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: India vs New Zealand Final: தொடர்ச்சியாக 2வது முறை.. டி20 உலகக் கோப்பை சொல்லி அடித்த இந்திய அணி!
ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமான வெற்றி:
CHAMPIONS AGAIN!
Huge congratulations to #TeamIndia on reclaiming the #T20I #World Cup! From the incredible grit on the field to the millions of hearts beating in the stands, this win is for every Indian.
My best wishes for your future endeavors!#T20WorldCup #MenInBlue… pic.twitter.com/PQC0z9cLdE
— TVK Vijay (@TVKVijayHQ) March 8, 2026
இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பதிவில், மீண்டும் சாம்பியன்! இந்திய அணி 20 ஓவர் உலக கோப்பையை மீண்டும் கைப்பற்றியதற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! மைதானத்தில் வீரர்கள் காட்டிய அசாதாரண போராட்ட மனப்பான்மை முதல் , அரங்கில் துடித்த கோடிக்கணக்கான இந்தியர்களின் இதயங்கள் வரை இந்த வெற்றி ஒவ்வொரு இந்தியருக்கும் சொந்தமானது என்று தெரிவித்துள்ளார்.