India vs New Zealand Final: தொடர்ச்சியாக 2வது முறை.. டி20 உலகக் கோப்பை சொல்லி அடித்த இந்திய அணி!
T20 World Cup 2026 ind vs NZ Final: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 3வது முறையும், தொடர்ச்சியாக 2வது முறையும், சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்திய அணி படைத்தது. முன்னதாக, கடந்த 2024ம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) பைனலில் இந்தியாவும், நியூசிலாந்தும் (IND vs NZ) அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். இதையடுத்து, பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பம் முதலே நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாக விளையாடியது. இதில், சஞ்சு சாம்சன் 89 ரன்களும், இஷான் கிஷன் 54 ரன்களும், அபிஷேக் சர்மா 52 ரன்களும் குவித்தனர். இது மட்டுமின்றி கடைசி நேரத்தில் சிவம் துபே 8 பந்துகளில் 26 ரன்கள் குவிக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது.
ALSO READ: கோப்பையுடன் வந்த தோனி, ரோஹித்.. அதிர்ந்த ஸ்டேடியம்! ஐசிசி சிறப்பு கௌரவம்..!




256 ரன்கள் எடுத்தால் முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை வெல்லலாம் என்ற எண்ணத்துடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 19 ஓவர்களில் 159 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளை இழந்து தோல்வியை சந்தித்தது. நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டிம் சீஃபர்ட்டின் 52 ரன்களும், கேப்டன் மிட்செல் சாண்ட்னரின் 43 ரன்களும் எடுத்திருந்தனர். வேறு எந்த நியூசிலாந்து பேட்ஸ்மேனும் 20 ரன்களை கூட தொடவில்லை.
இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜஸ்பிரித் பும்ரா 4 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். மேலும், ஹர்திக் பாண்ட்யா, வருண் சக்ரவர்த்தி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.
ALSO READ: டி20 உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக 50+ ஸ்கோர்.. சாதனை பட்டியலில் கால் வைத்த சஞ்சு சாம்சன்!
3வது முறை கோப்பையை வென்ற இந்திய அணி:
𝐂.𝐇.𝐀.𝐌.𝐏.𝐈.𝐎.𝐍.𝐒 🇮🇳#TeamIndia clinch a record 3️⃣rd ICC Men’s #T20WorldCup title 🏆
Take. A. Bow 🫡#MenInBlue | #Final | #INDvNZ pic.twitter.com/nml1AZY5tK
— BCCI (@BCCI) March 8, 2026
இதன்மூலம், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 3வது முறையும், தொடர்ச்சியாக 2வது முறையும், சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் அணி என்ற பெருமையையும் இந்திய அணி படைத்தது. முன்னதாக, கடந்த 2024ம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. இதுவரை, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் தலா இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளன. ஆனால், இந்தியா மூன்று முறை டி20 உலகக் கோப்பையை வென்ற முதல் நாடாக மாறியுள்ளது. இந்திய அணி 2007, 2024 மற்றும் தற்போது 2026ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.