India vs New Zealand Final: கதிகலங்க வைத்த சாம்சன் – அபிஷேக் கூட்டணி.. பைனலில் நியூசிலாந்து அணிக்கு 256 ரன்கள் இலக்கு!
2026 டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இன்று அதாவது 2026 மார்ச் 8ம் தேதி இந்தியாவும், நியூசிலாந்து அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது.
2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) இறுதிப்போட்டியில் இன்று அதாவது 2026 மார்ச் 8ம் தேதி இந்தியாவும், நியூசிலாந்து (IND vs NZ) அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது. இது டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோராகும். டாஸ் இழந்த இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய வருமாறு நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர் அழைத்தார். இது நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு தவறாக அமைந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் இந்தியாவுக்காக மிகப்பெரிய இன்னிங்ஸை விளையாடி 46 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 89 ரன்கள் எடுத்தார். இது தவிர, இஷான் கிஷன் 25 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 54 ரன்கள் எடுத்தார்.
ALSO READ: 18 பந்துகளில் அபிஷேக் சர்மா அதிரடி அரை சதம் – விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி




அதேநேரத்தில், கடைசி வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட அபிஷேக் சர்மா, வெறும் 21 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து சார்பில் ஜேம்ஸ் நீஷம் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும், ரச்சின் ரவீந்திரா மற்றும் மேட் ஹென்றி தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர். அதன்படி, நியூசிலாந்து அணிக்கு இறுதிப் போட்டியில் 250 ரன்களுக்கு மேல் துரத்துவது எளிதான காரியமல்ல.
சிறப்பான தொடக்கம், மிடில் ஆர்டரில் சொதப்பல்:
Innings Break!
A fiery batting performance takes #TeamIndia to a massive total in the #T20WorldCup #Final 👏🙌
Over to our bowlers! ⌛
Updates ▶️ https://t.co/5LXBod8bl1#MenInBlue | #INDvNZ️ pic.twitter.com/uqNTlARfK7
— BCCI (@BCCI) March 8, 2026
முதலில் பேட்டிங் செய்த அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் கூட்டணி இந்தியாவுக்கு ஒரு நல்ல தொடக்கத்தை அளித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி வெறும் 43 பந்துகளில் 98 ரன்கள் சேர்த்தது. அதன் பிறகு, இந்திய பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை பாடாய்படுத்தியது. சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தபோது இந்திய அணி 15.1 ஓவர்களில் 203 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் 2வது விக்கெட்டுக்கு 48 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்தனர்.
ALSO READ: கோப்பையுடன் வந்த தோனி, ரோஹித்.. அதிர்ந்த ஸ்டேடியம்! ஐசிசி சிறப்பு கௌரவம்..!
ஒரு கட்டத்தில் இந்திய அணி 300 ரன்களை நெருங்கும் என நினைத்தபோது, சஞ்சு விக்கெட்டுக்கு பிறகு, படிப்படியாக ரன் விகிதம் குறைய தொடங்கியது. உள்ளே வந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் தனது கணக்கைத் திறக்காமலேயே ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்ட்யாவும் 13 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுக்க, இறுதியில் சிவம் துபே அற்புதமாக விளையாடி இந்திய அணி 250 ரன்கள் கடக்க உதவி செய்தார். சிவம் துபே வெறும் 8 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் எடுக்க, இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் சேர்த்தது. இப்போது, நியூசிலாந்து அணி 256 ரன்கள் எடுத்தால் கோப்பை என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.