India Playing XI: மாற்றமில்லாமல் களமிறங்கிய இந்திய அணி.. தாக்கத்தை தருவார்களா அபிஷேக், வருண்?
India vs New Zealand Final: இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இந்த உலகக் கோப்பை முழுவதும் அவரது பேட்டிங் சிறப்பாக இல்லை. மறுபுறம், வருண் சக்ரவர்த்தியும் கேள்விக்குள்ளாக்கப்பட்டார்.
ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) இறுதிப் போட்டி இன்று, அதாவது 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இந்த அற்புதமான போட்டி இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் (IND vs NZ) இடையே நடைபெறுகிறது என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. முன்னதாக, இந்த இறுதிப் போட்டியின் பிளேயிங் லெவன் குறித்து நிறைய ஊகங்கள் இருந்தன. ஆனால் இந்த இறுதிப் போட்டியில் எந்த மாற்றமும் செய்யாமல் சூர்யகுமார் யாதவ் இந்திய அணியை களமிறக்கினார். அதாவது, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் விளையாடிய அணி கூட்டணி, அதே அணி இறுதிப் போட்டியிலும் களமிறங்கியது.
ALSO READ: 4வது முறையாக இறுதிப்போட்டியில் இந்தியா.. இதுவரை இந்திய அணி சாதித்தது என்ன?
இறுதிப் போட்டிக்கான தனது 11 பேர் கொண்ட அணியில் எந்த மாற்றத்தையும் செய்ய இந்திய அணி விரும்பவில்லை. கடந்த 2026 மார்ச் 5ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற பிறகும், அதன் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன. பெரும்பாலான விமர்சனங்கள் அபிஷேக் சர்மா மற்றும் வருண் சக்ரவர்த்தி மீது எழுந்தது. இதன் காரணமாக, நியூசிலாந்து அணிக்கு எதிராக போட்டியில் இறுதிப் போட்டியில் இந்திய அணி மாற்றங்களை செய்யும் என்று எதிர்பார்க்கப்பட்டாது. ஆனால் இப்போது எந்த மாற்றமும் செய்யாமல் இந்திய அணி இந்தப் போட்டியில் களமிறங்கியது ரசிகர்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அபிஷேக் மற்றும் வருண் சிறப்பாக செயல்படுவார்களா..?
இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மீண்டும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இந்த உலகக் கோப்பை முழுவதும் அவரது பேட்டிங் சிறப்பாக இல்லை. மறுபுறம், வருண் சக்ரவர்த்தியும் கேள்விக்குள்ளாக்கப்பட்டார். ஏனெனில் கடந்த சில போட்டிகளில் வருண் சக்கரவர்த்தி அதிக ரன்களை விட்டுகொடுத்தார். முன்னதாக, இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியில் வருண் சக்கரவர்த்தி 4 ஓவர்களில் 64 ரன்கள் விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இறுதிப் போட்டியில் இந்த 2 வீரர்களும் தாக்கத்தை ஏற்படுத்துவது முக்கியம்.
குல்தீப் மற்றும் ரிங்குவுக்கு கிடைக்காத வாய்ப்பு:
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 2 மாற்றங்களைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி, அபிஷேக் சர்மாவுக்குப் பதிலாக ரிங்கு சிங்குவும், வருணுக்குப் பதிலாக குல்தீப் யாதவுக்கு விளையாடும் 11 பேரில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் உட்பட பல ஜாம்பவான்கள் தெரிவித்தனர். ஆனால் இறுதிப் போட்டியில் எந்த மாற்றமும் இல்லாமல் இந்திய அணி களத்தில் இறங்கியது. இந்திய அணி 3வது முறையாக பட்டத்தை வெல்லத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, 2007 மற்றும் 2024ம் ஆண்டுகளில் இந்திய அணி பட்டத்தை வென்றிருந்தது. இந்த பட்டத்தை இந்திய அணி வென்றால், பட்டத்தை பாதுகாக்கும் முதல் அணியாக மாறும்.
ALSO READ: பைனலில் படையெடுக்கும் சாதனைகள்.. படைப்பார்களா 3 இந்திய வீரர்கள்?
இரு அணிகளின் பிளேயிங் லெவன்:
இந்திய அணி:
சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேட்ச்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், வருண் சகரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா
நியூசிலாந்து அணி:
டிம் சீஃபர்ட் (விக்கெட் கீப்பர்), ஃபின் ஆலன், ரச்சின் ரவீந்திரா, க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மாட் ஹென்றி, லாக்கி பெர்குசன், ஜேக்கப் டஃபி