India vs New Zealand Final: இந்தியா-நியூசிலாந்து டி20 போட்டிகளில் அதிக ரன்கள்.. ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து வீரர்கள்!
T2O World Cup 2026 Final: இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்திற்கு எதிரான டி20 சர்வதேச போட்டிகளில் பல சிறப்பான சாதனையைப் படைத்துள்ளார். 2021 மற்றும் 2026 க்கு இடையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய 13 போட்டிகளில் 58.44 என்ற சராசரியுடன் 526 ரன்கள் எடுத்தார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை 2026ன் (2026 T20 World Cup) இறுதிப் போட்டியானது இன்று அதாவது மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். இந்த இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் (IND vs NZ) பலப்பரீட்சை நடத்த இருக்கின்றனர். இரு அணிகளிலும் டி20 சர்வதேச போட்டிகளில் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடிய போதெல்லாமல் சிறப்பாக செயல்பட்ட பல வீரர்கள் உள்ளனர். குறிப்பாக பேட்டிங்கைப் பொறுத்தவரை, சில வீரர்கள் இந்த போட்டியில் தொடர்ந்து அதிக ரன்கள் அடித்து தங்களை வேறுபடுத்திக் காட்டியுள்ளனர். அப்படிப்பட்ட வீரர்களின் பட்டியலை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: வரலாற்றை மாற்றுமா இந்திய அணி.. நியூசிலாந்தின் தொடர் வெற்றி கதை தெரியுமா?
சூர்யகுமார் யாதவ் சிறப்பான சாதனை:
இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நியூசிலாந்திற்கு எதிரான டி20 சர்வதேச போட்டிகளில் பல சிறப்பான சாதனையைப் படைத்துள்ளார். 2021 மற்றும் 2026 க்கு இடையில் நியூசிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய 13 போட்டிகளில் 58.44 என்ற சராசரியுடன் 526 ரன்கள் எடுத்தார். அப்போது, அவரது ஸ்ட்ரைக் ரேட் 170.77 ஆகவும் இருந்தது. இது டி20 கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.




இது மட்டுமின்றி, நியூசிலாந்துக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் ஒரு சதம் மற்றும் 4 அரைசதங்களை அடித்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 111 நாட் அவுட் ஆகும். அவரது ஆக்ரோஷமான பேட்டிங் ஒன்றைய இறுதிப் போட்டியில் தொடர்ந்தால்இந்திய அணிக்கு மிக முக்கியமானதாக இருக்கும்.
ரோஹித் சர்மா:
இந்தப் பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவும் இரண்டாவது இடத்தில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக 17 டி20 போட்டிகளில் 34.06 என்ற சராசரியில் 511 ரன்கள் எடுத்துள்ளார். இதன்போது அவரது ஸ்ட்ரைக்கிங் 141.16 ஆக உள்ளது. அதன்படி, நியூசிலாந்து அணிக்கு எதிராக ரோஹித் சர்மா 6 அரைசதங்கள் அடித்துள்ளார். இருப்பினும், தற்போது ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதன் காரணமாக இது நியூசிலாந்து அணிக்கு சாதகமாக உள்ளது.
நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம்:
- நியூசிலாந்து அணிக்காக முன்னாள் தொடக்க வீரர் கொலின் முன்ரோ இந்தியாவுக்கு எதிராக 12 போட்டிகளில் ஒரு சதம் உள்பட 426 ரன்கள் எடுத்துள்ளார்.
- டிம் சீஃபர்ட் இந்தியாவுக்கு எதிராக 15 போட்டிகளில் 425 ரன்கள் எடுத்துள்ளார்.
- இந்தப் பட்டியலில் நியூசிலாந்தின் முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்தியாவுக்கு எதிராக 13 போட்டிகளில் 419 ரன்கள் எடுத்துள்ளார்.
ALSO READ: இந்தியா-நியூசிலாந்து T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எப்போது, எங்கே காணலாம்? முழு விவரம்!
யார் ஆதிக்கம் செலுத்துவார்கள்?
2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்து அணியும் மோதவுள்ள நிலையில், அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த ஸ்டேடியம் இந்தியாவில் மிகப்பெரிய ஸ்டேடியம் என்றாலும், இங்கு இரு அணிகள் மோதும் போதெல்லாம் அதிக ஸ்கோர்கள் கொண்ட போட்டியாகவே அமைந்துள்ளது. எனவே, இன்றைய போட்டியும் அதிக ஸ்கோர் கொண்ட போட்டியாக இருக்கும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.