AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs NZ Final: இந்திய அணிக்கு ராசியில்லாத ஞாயிற்றுக்கிழமை.. பைனல் விளையாடினால் தோல்வி தானா?

T20 World Cup 2026 ind vs nz Final: இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இதுவரை வென்றதில்லை என்ற வரலாற்றை கொண்டுள்ளது. இது ஒரு வகையான மூடநம்பிக்கை என்றாலும், புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இதுவே உண்மை. இதனை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்வோம்.

IND vs NZ Final: இந்திய அணிக்கு ராசியில்லாத ஞாயிற்றுக்கிழமை.. பைனல் விளையாடினால் தோல்வி தானா?
இந்திய அணியின் தோல்வி தருணங்கள்
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 07 Mar 2026 21:39 PM IST

இந்தியா – நியூசிலாந்து (IND vs NZ) இடையிலான 2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) இறுதிப்போட்டி நாளை அதாவது 2026 மார்ச் 8ம் தேதி (ஞாயிற்று கிழமை) நடைபெறுகிறது. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடப்பதே, ஒரு புறம் இந்திய ரசிகர்களுக்கு பயத்தை கொடுக்கிறது. காரணம் இங்குதான் இந்திய அணி கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தது. அதேநேரத்தில், புள்ளி விவரங்களில் அடிப்படையில் இந்திய அணிக்கு இறுதிப்போட்டி என்று வந்தாலே ஞாயிற்றுக்கிழமை ராசியில்லாத நாளாகவே உள்ளது. அதாவது, இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நடந்த உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இதுவரை வென்றதில்லை என்ற வரலாற்றை கொண்டுள்ளது. இது ஒரு வகையான மூடநம்பிக்கை என்றாலும், புள்ளிவிவரங்கள் அடிப்படையில் இது உண்மையே. இதனை பற்றிய முழு விவரங்களை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: எதையாச்சும் புதுசா சொல்லுங்க.. சாண்ட்னர் சவாலுக்கு சூர்யகுமார் யாதவ் பதிலடி!

இந்திய அணிக்கு ராசியில்லாத ஞாயிற்றுக்கிழமை:

  • 2003 ஒருநாள் உலகக் கோப்பை பைனல் – இந்தியா vs ஆஸ்திரேலியா (மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை) – இந்திய அணி தோல்வி
  • 2023 ஒருநாள் உலகக் கோப்பை பைனல் – இந்தியா vs ஆஸ்திரேலியா (நவம்பர் 19, ஞாயிற்றுக்கிழமை) – இந்திய அணி தோல்வி
  • 2014 டி20 உலகக் கோப்பை பைனல் – இந்தியா vs இலங்கை (ஏப்ரல் 6, ஞாயிற்றுக்கிழமை) – இந்திய அணி தோல்வி

ALSO READ: இந்திய அணி சாம்பியனாவது உறுதி! சூர்யா படைக்கு சாதகமாக உள்ள 4 சூழல்கள்!

இந்திய அணிக்கு ராசியான நாள் எது..?


இந்திய அணி பெரும்பாலும் உலகக் கோப்பையை வென்றபோதெல்லாம், அது சனிக்கிழமையாகவே இருந்துள்ளது. அதற்கான புள்ளி விவரங்களும் பின்வருமாறு..

  • 1983 ஒருநாள் உலகக் கோப்பை: (ஜூன் 25 – சனிக்கிழமை) லார்ட்ஸில் இந்தியா தனது முதல் சாம்பியன் பட்டத்தை வென்றது.
  • 2011 ஒருநாள் உலகக் கோப்பை: (ஏப்ரல் 2, சனிக்கிழமை) வான்கடேயில் தோனியின் வரலாற்றுச் சிறப்புமிக்க சிக்ஸர் வெற்றி பெற்றது.
  • 2024 டி20 உலகக் கோப்பை: (ஜூன் 29, சனிக்கிழமை) பார்படோஸில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது.
  • 2007 டி20 உலகக் கோப்பை: (செப்டம்பர் 24, திங்கட்கிழமை) பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது.

Follow Us