IND vs NZ Final: நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர்.. இந்தியாவின் கடந்த கால சாதனைகள்!
IND vs NZ Highest Totals T20I: நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச டி20 சர்வதேச ஸ்கோர் 271 ரன்கள் ஆகும். இந்த சாதனை கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி திருவனந்தபுரத்தில் பதிவானது. அந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது.
2026 டி20 உலகக் கோப்பை (2026 T20 World Cup) இறுதிப் போட்டிக்கு அதிகபட்சமாக இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளது. நாளை அதாவது 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்தியாவும் நியூசிலாந்தும் இரவு 7 மணிக்கு மோதவுள்ளன. இந்திய அணி (Indian Cricket Team) வெற்றி பெற்றால் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் 3வது முறையாகவும், தொடர்ச்சியாக 2வது முறையாகவும் கோப்பையை வெல்லும். அதேநேரத்தில், நியூசிலாந்து அணி வெற்றி பெற்றால் டி20 உலகக் கோப்பையை முதல் முறையாக தட்டி தூக்கும். இந்தநிலையில், எந்த அணி கோப்பையை வெல்லும் என்பதை காண இருநாட்டு கிரிக்கெட் ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இப்படியான சூழ்நிலையில், இந்தியா – நியூசிலாந்து இடையிலான கடந்த கால சாதனையை பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான டி20 சர்வதேச போட்டிகளில், இரு அணிகளும் பெரும்பாலும் அதிக ஸ்கோர்களை பதிவு செய்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், இந்திய அணி குறிப்பாக நியூசிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அதிக ஸ்கோர்களை பதிவு செய்துள்ளது.
ALSO READ: பைனலில் இந்தியா நியூசிலாந்தை வெல்ல முடியுமா? புள்ளிவிவரங்கள் யாருக்கு சாதகம்?




இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர்:
நியூசிலாந்துக்கு எதிராக இந்தியாவின் அதிகபட்ச டி20 சர்வதேச ஸ்கோர் 271 ரன்கள் ஆகும். இந்த சாதனை கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி திருவனந்தபுரத்தில் பதிவானது. அந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 271 ரன்கள் எடுத்தது. கடந்த 2026 ஜனவரி 21ம் தேதி நாக்பூரில் நியூசிலாந்திற்கு எதிராக இந்தியா 238 ரன்கள் எடுத்தது. 2023ம் ஆண்டு இதே அகமதாபாத் ஸ்டேடியத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி 234 ரன்கள் எடுத்தது.
நியூசிலாந்து அணியின் அதிகபட்ச ஸ்கோர்:
கடந்த 2026ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த போட்டியில் நியூசிலாந்து 225 ரன்கள் எடுத்தது. இருப்பினும், இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்தது. மேலும், 2019ம் ஆண்டு வெலிங்டனில் நடந்த போட்டியில், நியூசிலாந்து இந்தியாவுக்கு எதிராக 219 ரன்கள் எடுத்து அந்த போட்டியில் வெற்றி பெற்றது. அதன்படி, இந்தியாவும் நியூசிலாந்து அணியும் டி20 போட்டிகளில் மோதும் போதெல்லாம், அந்தப் போட்டி பெரும்பாலும் அதிக ரன்கள் குவிக்கப்பட்ட போட்டியாகவே உள்ளது.
ALSO READ: நியூசிலாந்துக்கு எதிரான பைனல்.. இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி?
இறுதிப் போட்டியில் எந்த அணி ஸ்கோரை பதிவு செய்யும்?
2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி அகமதாபாத்தில் நடைபெற உள்ள நிலையில், ரசிகர்கள் மீண்டும் அதிக ரன்கள் குவிக்கும் போட்டியை எதிர்பார்க்கின்றனர். நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் உள்ள ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற பிட்சாக கருதப்படுகிறது. இதனால், இரு அணிகளும் அதிக ரன்கள் குவிக்க வாய்ப்புள்ளது. இந்திய அணி தங்கள் சொந்த மண்ணில் எப்படியாவது கோப்பையை வெல்ல முயற்சிக்கும். அதே நேரத்தில், நியூசிலாந்து அணி கோப்பையை முதல் முறையாக வெல்ல போராடும்.