AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs NZ Final: இந்திய அணி சாம்பியனாவது உறுதி! சூர்யா படைக்கு சாதகமாக உள்ள 4 சூழல்கள்!

T20 World Cup 2026 Final: 2011 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பு, அந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் மட்டுமே தோல்வியடைந்திருந்தது. இப்போது, ​​2026 டி20 உலகக் கோப்பையிலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவிடம் மட்டுமே இந்திய அணி இதுவரை தோல்வியடைந்துள்ளது.

IND vs NZ Final: இந்திய அணி சாம்பியனாவது உறுதி! சூர்யா படைக்கு சாதகமாக உள்ள 4 சூழல்கள்!
இந்திய அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 07 Mar 2026 19:53 PM IST

2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) இறுதிப் போட்டி இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (IND vs NZ) இடையே நடைபெற உள்ளது. இந்த இறுதிப் போட்டியானது நாளை அதாவது 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். அந்தவகையில், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்தை எதிர்த்து இந்திய அணி இதுவரை வென்றதில்லை. எனவே, இந்த வரலாற்றை இந்திய அணி மாற்ற முயற்சிக்கும். நியூசிலாந்திற்கு எதிரான இறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் 4 முக்கியமான விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோம். இது முழுக்க முழுக்க இந்திய அணிக்கு சாதகமாக அமையும்.

ALSO READ: நியூசிலாந்து அணிக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர்.. இந்தியாவின் கடந்த கால சாதனைகள்!

இந்தியாவின் வெற்றிக்கான முதல் சாதகமான சூழல்:

ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை ஒருநாள் மற்றும் டி20 உலகக் கோப்பைகளில் தோற்கடித்த போதெல்லாம், இந்திய அணியே சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. முன்னதாக, கடந்த 1983 ஒருநாள் உலகக் கோப்பையிலும், 2007 டி20 உலகக் கோப்பையிலும் ஜிம்பாப்வே அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. அப்போது, இந்திய அணியே சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்தவகையில், ஜிம்பாப்வே அணி 2026 டி20 உலகக் கோப்பை லீக் ஸ்டேஜில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதனால், 2026 டி20 உலகக் கோப்பையிலும் இந்தியா சாம்பியனாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் வெற்றிக்கான 2வது சாதகமான சூழல்:

2011 ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணி முதல் முறையாக சொந்த மண்ணில் சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையை பெற்றது. இதனை தொடர்ந்து இதுவரை எந்தவொரு அணியும் தங்களது சொந்த மண்ணில் டி20 உலகக் கோப்பையை வென்றதில்லை. அதன்படி, 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு அந்த வாய்ப்பு உள்ளது. 2011 ஒருநாள் உலகக் கோப்பையின் வரலாற்றை மாற்றியதுபோல், 2026 டி20 உலகக் கோப்பையிலும் மாற்றி இந்திய அணி வரலாறு படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் வெற்றிக்கான 3வது சாதகமான சூழல்:

2011 ஒருநாள் உலகக் கோப்பையை வெல்வதற்கு முன்பு, அந்த உலகக் கோப்பையில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவிடம் மட்டுமே தோல்வியடைந்திருந்தது. இப்போது, ​​2026 டி20 உலகக் கோப்பையிலும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவிடம் மட்டுமே இந்திய அணி இதுவரை தோல்வியடைந்துள்ளது. இதனால்தான் 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

ALSO READ: டி20 உலகக் கோப்பை நிறைவு விழா.. 3 முக்கிய பாடகர்கள் பங்கேற்பு!

இந்தியாவின் வெற்றிக்கான 4வது சாதகமான சூழல்:

டி20 உலகக் கோப்பை வரலாற்றில், இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே அரையிறுதிப் போட்டி நடைபெறும் போதெல்லாம், வெற்றி பெற்ற அணிதான் அந்த டி20 உலகக் கோப்பையில் சாம்பியனாகியுள்ளது. 2022 டி20 உலகக் கோப்பையில், இங்கிலாந்து அரையிறுதியில் இந்திய அணியை வென்று, இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியனானது. 2024 டி20 உலகக் கோப்பையில், இந்தியா அரையிறுதியில் இங்கிலாந்தை வென்று பின்னர் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியனானது. இந்தப் போக்கு தொடர்ந்தால், 2026 டி20 உலகக் கோப்பையிலும் இந்தியா சாம்பியனாக முடியும். இந்த முறை, அரையிறுதியில் இங்கிலாந்தை இந்திய அணி தோற்கடித்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us