IND vs NZ Final: எதையாச்சும் புதுசா சொல்லுங்க.. சாண்ட்னர் சவாலுக்கு சூர்யகுமார் யாதவ் பதிலடி!
Suryakumar Yadav: இந்தியா - நியூசிலாந்து இடையிலான இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். சமீபத்தில், மிட்செல் சாண்ட்னர் கோப்பையை வெல்வதன் மூலம் இந்திய ரசிகர்களின் இதயத்தை சோகமாக்க விரும்புவதாக கூறினார். தற்போது, இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இதற்கு பதிலளித்துள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியும், மிட்செல் சாண்ட்னர் (Mitchell Santner) தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது நாளை அதாவது 2026 மார்ச் 8ம் தேதி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இந்த இறுதிப் போட்டிக்கு முன்னதாக, இரு அணிகளின் கேப்டன்களும் வார்த்தைப் போரில் ஈடுபட்டுள்ளனர். இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும். சமீபத்தில், மிட்செல் சாண்ட்னர் கோப்பையை வெல்வதன் மூலம் இந்திய ரசிகர்களின் இதயத்தை சோகமாக்க விரும்புவதாக கூறினார். தற்போது, இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் இதற்கு பதிலளித்துள்ளார்.
ALSO READ: இந்தியர்களின் இதயங்களை உடைப்போம்.. கம்மின்ஸ் பாணியை கையில் எடுத்த சாண்ட்னர்!




மிட்செல் சாண்ட்னர் என்ன சொன்னார்?
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய நியூசிலாந்து கேப்டன் மிட்செல் சாண்ட்னர், “ நாங்கள் அவர்களுக்கு பிடித்தவர்களாக இல்லாமல் கூட இருக்கலாம். ஆனால், அணியாக ஒன்றிணைந்து விளையாடினால், கோப்பையை வெல்வோம். கோப்பையை உயர்த்தும்போது சில ரசிகர்களின் இதயங்களை உடைப்பதைப் பற்றி தனக்கு எந்த கவலையும் இல்லை. டி20 கிரிக்கெட் நிச்சயமற்ற தன்மைகளால் நிறைந்துள்ளது. நியூசிலாந்து அணி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டால், எந்த அணியையும் தோற்கடிக்க முடியும், சந்தேகத்திற்கு இடமின்றி, இந்திய அணி இறுதிப் போட்டியில் வென்று சொந்த ரசிகர்களுக்கு முன்னால் கோப்பையை வெல்ல வேண்டிய அழுத்தத்தில் இருக்கும். அதை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்வோம்” என்று தெரிவித்தார்.
ALSO READ: இந்திய அணி சாம்பியனாவது உறுதி! சூர்யா படைக்கு சாதகமாக உள்ள 4 சூழல்கள்!
பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவ்:
🚨SURYAKUMAR YADAV REPLY SANTNER STATEMENT.🚨
Q🎙️: Final feelings? And Santner’s “silence the crowd” comment?
Surya🎙️-“Wahi same line bol rahe hain sab, kuch naya bolne do. But honestly, the mood in our camp is very relaxed and happy. 😅 pic.twitter.com/jBo3ytJOMb
— Sam (@Cricsam01) March 7, 2026
இறுதிப் போட்டிக்கு முந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், ”எல்லோரும் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வதில் மும்முரமாக இருக்கிறார்கள். அவர்கள் புதிதாக ஏதாவது ஒன்றை சொல்ல வேண்டும். சொந்த மண்ணில், சொந்த ரசிகர்களுக்கு முன்னால், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடுவது ஒரு சிறப்பு அனுபவம். அணியின் ஒவ்வொரு வீரர்களும் இந்த தருணத்தைப் பற்றி உற்சாகமாக இருக்கிறார்கள். அதன்படி, உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட இந்திய அணி உற்சாகமாகவும் தயாராகவும் உள்ளது” என்று கூறினார்.