IND vs NZ Final: இந்தியா-நியூசிலாந்து T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எப்போது, எங்கே காணலாம்? முழு விவரம்!
IND vs NZ Final Live Streaming: டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுவது இதுவே முதல் முறை. அதேநேரத்தில், இரு அணிகளும் ஐசிசி போட்டிகளின் இறுதிப் போட்டிகளில் மூன்று முறை சந்தித்துள்ளன. இதில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் வடிவங்கள் அடங்கும். இதில், நியூசிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது.
2026 டி20 உலகக் கோப்பையின் (2026 T20 World Cup) இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து (IND vs NZ) அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியானது இன்று அதாவது 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியை காண இருநாட்டு ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதுவது இதுவே முதல் முறை. அதேநேரத்தில், இரு அணிகளும் ஐசிசி போட்டிகளின் இறுதிப் போட்டிகளில் மூன்று முறை சந்தித்துள்ளன. இதில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் வடிவங்கள் அடங்கும். இதில், நியூசிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்திய அணி ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. எனவே, இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது மோதலை எப்போது, எங்கே, எப்படி இலவசமாக நேரடியாகப் பார்க்கலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: எதையாச்சும் புதுசா சொல்லுங்க.. சாண்ட்னர் சவாலுக்கு சூர்யகுமார் யாதவ் பதிலடி!
போட்டி எப்போது, எந்த நேரத்தில் நடைபெறும்?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி வருகின்ற 2026 மார்ச் 8ம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டி இந்திய நேரப்படி மாலை 7:00 மணிக்குத் தொடங்கும்.




போட்டி எங்கே நடக்கும்?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறும் .
டிவியில் நேரடியாக எங்கே பார்ப்பது?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இறுதிப் போட்டி இந்தியாவில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும். மேலும், இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான பட்டப் போட்டி DD ஸ்போர்ட்ஸில் இலவசமாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது.
ஓடிடி தளத்தில் எங்கு காணலாம்?
இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான பைனல் போட்டியை ஜியோஹாட்ஸ்டார் வழியாக நேரடியாக ஒளிபரப்பப்படும். இருப்பினும் இதற்கும் உங்களுக்கு சந்தா தேவைப்படலாம்.
இந்திய அணியின் முழு விவரம்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்சர் படேல், சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரித் பும்ரா , வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், ரிங்கு சிங், முகமது சிராஜ்.
ALSO READ: இந்திய அணிக்கு ராசியில்லாத ஞாயிற்றுக்கிழமை.. பைனல் விளையாடினால் தோல்வி தானா?
நியூசிலாந்து அணியின் முழு விவரம்:
மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), ஃபின் ஆலன், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டஃபி, லாக்கி பெர்குசன், மேட் ஹென்றி, டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் சீஃபர்ட், இஷ் சோதி, கைல் ஜேமிசன், கோல் மெக்கோன்சி.