AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

T20 World Cup 2026 Final: பைனலில் படையெடுக்கும் சாதனைகள்.. படைப்பார்களா 3 இந்திய வீரர்கள்?

Indian Players Records: டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து அணியை இந்திய அணி 3 முறை சந்தித்துள்ளது. இந்த 3 முறையும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி புதிய வரலாறு படைக்கும்.

T20 World Cup 2026 Final: பைனலில் படையெடுக்கும் சாதனைகள்.. படைப்பார்களா 3 இந்திய வீரர்கள்?
வருண் சக்கர்வர்த்தி - சிவம் துபே - அபிஷேக் சர்மாImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Mar 2026 17:30 PM IST

டி20 உலகக் கோப்பை 2026 (2026 T20 World Cup) இறுதிப் போட்டி இன்று அதாவது 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் (IND vs NZ) இரவு 7:00 மணிக்கு நேருக்குநேர் மோதுகின்றன. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் நியூசிலாந்து அணியை இந்திய அணி 3 முறை சந்தித்துள்ளது. இந்த 3 முறையும் நியூசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி புதிய வரலாறு படைக்கும். அதே நேரத்தில், மிட்செல் சாண்ட்னர் நியூசிலாந்து அணிக்கு முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுப்பார்.

ALSO READ: இந்தியா-நியூசிலாந்து T20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எப்போது, ​​எங்கே காணலாம்? முழு விவரம்!

வரலாற்று மைல்கற்களை நோக்கி 3 இந்திய வீரர்கள்:

2026 இந்தியா vs நியூசிலாந்து டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பல இந்திய வீரர்கள் வரலாறு படைக்கும் வாய்ப்பு உள்ளது. சிவம் துபே, அபிஷேக் சர்மா மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் நியூசிலாந்து அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் சிறப்பாக செயல்பட்டால், முக்கிய தனிப்பட்ட சாதனைகளை படைக்க வாய்ப்புள்ளது.

வருண் சக்ரவர்த்தி:

மர்ம சுழற்பந்து வீச்சாளர் என்ற பெயர் எடுத்துள்ள வருண் சக்கரவர்த்தி, தற்போது ஐசிசி டி20 பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இந்தநிலையில் சர்வதேச, உள்ளூர் மற்றும் ஐபிஎல் டி20 போட்டிகளில் 196 விக்கெட்டுகளுடன், வருண் தனது வாழ்க்கையில் 200 டி20 விக்கெட்டுகளை எட்டுவதற்கு இன்னும் 4 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக உள்ளது. இறுதிப் போட்டியில் இந்த சாதனையை படைத்தால், கிரிக்கெட் வரலாற்றில் நீண்ட காலம் பேசப்படும்.

சிவம் துபே:

இந்திய அணியின் அதிரடி ஆல்ரவுண்டர் சிவம் துபே சர்வதேச டி20 போட்டிகளில் 1,000 ரன்களை எட்ட இன்னும் 35 ரன்கள் மட்டுமே தேவையாக உள்ளது. இதுவரை இந்திய அணிக்காக துபே 63 போட்டிகளில் விளையாடி 6 அரைசதங்களுடன் 965 ரன்கள் குவித்துள்ளார். நியூசிலாந்திற்கு எதிராக 35 ரன்களை அடிப்பது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கிய சாதனையாக மாறும்.

அபிஷேக் சர்மா:

ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள அபிஷேக் சர்மா, 2026 டி20 உலகக் கோப்பையில் பெரிதாக ஜொலிக்கவில்லை. இருப்பினும், இவருக்கு குறிப்பிடத்தக்க முத்திரையைப் பதிக்க ஒரு வாய்ப்பு உள்ளது. அபிஷேக் சர்மா 100 டி20 சர்வதேச சிக்ஸர்களை எட்ட இன்னும் 7 சிக்ஸர்கள் மட்டுமே தேவையாக உள்ளது. இறுதிப் போட்டியில் அபிஷேக் இந்த சாதனையை எட்டினால், டி20 போட்டிகளில் 100 சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் அபிஷேக் சர்மா இணைவார். இன்றுவரை, அபிஷேக் 45 போட்டிகளில் 93 சர்வதேச சிக்ஸர்களை அடித்துள்ளார்.

ALSO READ: டி20 உலகக் கோப்பை நிறைவு விழா.. 3 முக்கிய பாடகர்கள் பங்கேற்பு!

அகமதாபாத்தில் நடைபெறும் இன்றைய இந்தியா – நியூசிலாந்து இடையிலான இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பையை வெல்வது மட்டுமல்லாமல்,  டி20 கிரிக்கெட் வரலாற்றில் தங்கள் பெயர்களைப் பொறிக்கும் வாய்ப்பையும் இந்திய வீரர்களுக்கு வழங்குகிறது.

Follow Us