T20 World Cup 2026 Final: கோப்பையுடன் வந்த தோனி, ரோஹித்.. அதிர்ந்த ஸ்டேடியம்! ஐசிசி சிறப்பு கௌரவம்..!
T20 World Cup Trophy: இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த எம்.எஸ்.தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 2026 டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்தி நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்குள் கொண்டு வந்தனர். இவர்களுடன் ஐசிசி தலைவர் ஜெய் ஷாவும் உடனிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
2026 டி20 உலகக் கோப்பையில் (2026 T20 World Cup) இந்தியாவும் (Indian Cricket Team), நியூசிலாந்து அணியும் இறுதிப்போட்டியில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடி வருகிறது. இந்த போட்டிக்கு தொடங்குவதற்கு முன்னதாக, இந்திய அணிக்கு டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த எம்.எஸ்.தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் 2026 டி20 உலகக் கோப்பையை கையில் ஏந்தி நரேந்திர மோடி ஸ்டேடியத்திற்குள் கொண்டு வந்தனர். இவர்களுடன் ஐசிசி தலைவர் ஜெய் ஷாவும் உடனிருந்தார். இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. 2007ம் ஆண்டு இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய பெருமை தோனிக்கும், 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய பெருமை ரோஹித் சர்மாவுக்கும் உண்டு.
ALSO READ: நியூசிலாந்து டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு
கோப்பையுடன் வந்த தோனி – ரோஹித்:
MOMENT OF DAY 🥹
DHONI, ROHIT & JAY SHAH WITH T20 WORLD CUP TROPHY. pic.twitter.com/npPyv72Oeg
— Johns. (@CricCrazyJohns) March 8, 2026
அரையிறுதியிலும் இந்திய போட்டியை கண்ட ரோஹித், தோனி:
மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் கடந்த 2026 மார்ச் 5ம் தேதி இந்தியாவும், இங்கிலாந்தும் அரையிறுதி போட்டியில் மோதியது. இந்த போட்டியை காண மகேந்திர சிங் தோனியும், ரோஹித் சர்மாவும் வந்திருந்தனர். சிறிது நேரம் இருவரும் ஒன்றாக நின்று பேசிய வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
ALSO READ: மாற்றமில்லாமல் களமிறங்கிய இந்திய அணி.. தாக்கத்தை தருவார்களா அபிஷேக், வருண்?
வைரலான ரோஹித், தோனி வருகை:
#WATCH | Gujarat: Former Captain of the Indian Cricket Team, Rohit Sharma and his wife Ritika Sajdeh arrive in Ahmedabad to watch the India vs New Zealand #ICCT20WorldCup final at Narendra Modi Stadium this evening. pic.twitter.com/iXVibFowWH
— ANI (@ANI) March 8, 2026
இந்தியா – நியூசிலாந்து இடையிலான இறுதிப்போட்டி நடைபெறும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இந்திய அணியை உற்சாகப்படுத்த ஏராளமான பிரபலங்கள் வந்துள்ளனர். முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனி மாலை 4 மணியளவில் அகமதாபாத்திற்கு வருகை புரிந்தார். அதனை தொடர்ந்து, இந்திய வீரர் ரோஹித் சர்மா தனது மனைவி ரித்திகா சஜ்தேவுடன் போட்டியை காண அகமதாபாத் வந்தார். பின்னர், இருவரும் தங்கள் காரில் ஏறி வெளியேறினர். தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைக்கான பிராண்ட் தூதராகவும் ரோஹித் சர்மா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


