இந்திய அணியை தற்போது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான வீரர்கள் களமிறங்கவிருக்கின்றனர். டி20 உலகக்கோப்பை 2026 தொடரில் இந்தியா முழுமையான ஆதிக்கத்துடன் விளையாடவில்லை என்றாலும், முக்கியமான தருணங்களில் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குரூப் சுற்றில் இந்தியா அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகளை தோற்கடித்து தோல்வியின்றி அடுத்த கட்டத்திற்கு முன்னேறியது. இதனால் இந்தியா போட்டியின் முக்கியமான அணியாக திகழ்ந்தது.
இதையும் படிக்க : IND vs NZ Final: 4வது முறையாக இறுதிப்போட்டியில் இந்தியா.. இதுவரை இந்திய அணி சாதித்தது என்ன?
அகமதாபாத்தில் தோனி வருகை
🚨 MS DHONI IN AHMEDABAD 🚨
• 🇮🇳 Mahendra Singh Dhoni has arrived in Ahmedabad to watch the India vs New Zealand national cricket team final match…..Seemore
— lndian Sports Netwrk (@IS_Netwrk29) March 8, 2026
ஆனால் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்கா எதிராக கடுமையான சவால் ஏற்பட்டது. அந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது. இந்த தோல்வி இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. அதன் பின் இந்தியா மீண்டும் ஜிம்பாப்வே மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளை வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தப் போட்டி திரில்லர் படங்களுக்கு நிகராக கடைசி வரை பரபரப்பாக நிலவியது.9
இதையும் படிக்க : T20 World Cup Final: இன்னும் ஒரு ரன் போதும்! எம்.எஸ்.தோனி சாதனை பட்டியலில் இணையும் சஞ்சு சாம்சன்..!
இந்திய அணி மீண்டும் வெற்றி பெற்று ஒரு வரலாற்று சாதனை படைக்கவுள்ளது. இந்த இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றால், டி20 உலகக்கோப்பை பட்டத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றிகரமாக காக்கும் முதல் அணியாக இந்தியா சாதனை படைக்கும். இதனால் இந்திய ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இந்த இறுதிப்போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.