T20 World Cup Final: இன்னும் ஒரு ரன் போதும்! எம்.எஸ்.தோனி சாதனை பட்டியலில் இணையும் சஞ்சு சாம்சன்..!
Sanju Samson: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி 98 டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடி 1,617 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கிடையில், சஞ்சு சாம்சன் தற்போது 44 டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்டராக 999 ரன்கள் எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக, சாம்சன் இந்தியாவுக்காக 61 டி20 போட்டிகளில் 1,310 ரன்கள் எடுத்துள்ளார்
2026 டி20 உலகக் கோப்பைக்கான இறுதிப் போட்டி (T20 World Cup Final) இன்று அதாவது 2026 மார்ச் 8ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தியா – நியூசிலாந்து (IND vs NZ) அணிகள் மோதும் இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி நாக் அவுட் போட்டிகளில் சிறந்த ஃபார்மில் இருந்த தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் இன்றைய நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோர் எதிர்பார்க்கின்றனர்.
முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் சஞ்சு சாம்சன் 97 ரன்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதியில் 89 ரன்கள் எடுத்தார். இந்தநிலையில், நியூசிலாந்து எதிரான இறுதிப்போட்டியில் சஞ்சு சாம்சன் விரைவான மற்றும் உறுதியான தொடக்கத்தை வழங்குவார் என்று இந்தியா ரசிகர்கள் மீண்டும் எதிர்பார்ப்பார்கள்.
ALSO READ: இந்தியா-நியூசிலாந்து டி20 போட்டிகளில் அதிக ரன்கள்.. ஆதிக்கம் செலுத்தும் நியூசிலாந்து வீரர்கள்!




வரலாற்று மைல்கல்லை நெருங்கி வரும் சஞ்சு சாம்சன்:
சஞ்சு சாம்சன் நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப்போட்டிக்காக அகமதாபாத்தில் பேட்டிங் செய்ய களமிறங்கும்போது, அவர் ஒரு பெரிய மைல்கல்லை எட்டுவதற்கு ஒரு ரன் மட்டுமே தேவையாக உள்ளது. அதாவது, நியூசிலாந்திற்கு எதிரான டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சஞ்சு சாம்சன் ஒரு ரன் கூட எடுத்தால், இந்திய கிரிக்கெட்டில் ஒரு சிறப்பு பட்டியலில் இணைவார். மேலும் எம்எஸ் தோனிக்குப் பிறகு டி20 சர்வதேச போட்டிகளில் 1,000 ரன்கள் எடுத்த இரண்டாவது இந்திய விக்கெட் கீப்பர்-பேட்டர் என்ற பெருமையைப் பெறுவார்.
தோனியின் சாதனையை எட்ட வாய்ப்பு:
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி 98 டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடி 1,617 ரன்கள் எடுத்துள்ளார். இதற்கிடையில், சஞ்சு சாம்சன் தற்போது 44 டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்டராக 999 ரன்கள் எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக, சாம்சன் இந்தியாவுக்காக 61 டி20 போட்டிகளில் 1,310 ரன்கள் எடுத்துள்ளார். இருப்பினும் அவர் ஒரு சில போட்டிகளில் விக்கெட் கீப்பராக விளையாடவில்லை. இறுதிப் போட்டியில் இந்த மைல்கல்லை எட்டுவது அவரை இந்தியாவின் மிகவும் பிரபலமான கேப்டன்களில் ஒருவராக மாற்றும்.
சாம்சனுக்கு ஏற்ற இறக்கங்கள்:
2026 டி20 உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சனின் தொடக்கம் சிறப்பானதாக இல்லை. ஆரம்பத்தில் சஞ்சு சாம்சன் விளையாடும் லெவன் அணியில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அபிஷேக் சர்மா உடல்நிலை சரியில்லாமல் போனபோது அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அபிஷேக் திரும்பியதும், சாம்சன் மீண்டும் ஓரங்கட்டப்பட்டார். இருப்பினும், தொடக்க ஜோடியான இஷான் கிஷான் மற்றும் அபிஷேக் ஆஃப்-ஸ்பின்னை எதிர்கொள்ளத் தடுமாறியபோது, அணி நிர்வாகம் சாம்சனை மீண்டும் அழைத்து வந்து இடது-வலது தொடக்க கூட்டணியை உருவாக்கியது. அணிக்குத் திரும்பியதிலிருந்து, அவர் தனது அற்புதமான ஆட்டத்தால் தனது இடத்தை தக்க வைத்து கொண்டார்.
இதுவரை டி20 உலகக் கோப்பை 2026 போட்டியில், சஞ்சு சாம்சன் 4 இன்னிங்ஸ்களில் 2 அரைசதங்கள் உள்பட 232 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்சமாக 97* ரன்கள் எடுத்துள்ளார். இறுதிப் போட்டிக்கு முன்னேற இந்திய அணிக்கு இது முக்கியமானதாக அமைந்தது.